சாலை ஓரத்தில் நடைமேடை அமைக்கும் பணிகள் தீவிரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சாலை ஓரத்தில் நடைமேடை அமைக்கும் பணிகள் தீவிரம்

Added : ஜூலை 18, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

எலச்சிபாளையம்: வேலகவுண்டம்பட்டியில், சாலை ஓரத்தில் நடைமேடை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. எலச்சிபாளையம் ஒன்றியம், வேலகவுண்டம்பட்டியில், பல மாதங்களாக திருச்செங்கோடு- நாமக்கல் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வந்தன. அப்பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், பாதசாரிகள் நடந்து செல்ல வசதியாக, சாலை ஓரத்தில் நடைமேடை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன், இப்பகுதி சாலை ஓரம் மோசமாக இருந்தது. பாதசாரிகள் நடக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தனர். நடந்து செல்ல வசதியாக, சாலை ஓரத்தில், நடைமேடையை அமைக்க வேண்டும் என்பது, மக்களின் கோரிக்கையாக இருந்தது. தற்போது, நடைமேடை அமைக்கப்பட்டு வருவதால், மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை