எலச்சிபாளையம்: திருச்செங்கோடு தாலுகா, எலச்சிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே, கடந்த ஓராண்டுக்கு முன்வரை பயணிகள் நிழற்கூடம் அமைக்கப்பட்டிருந்தது. சாலை விரிவாக்க பணிகள் நடந்து வந்ததால், நிழற்கூடம் முற்றிலும் அகற்றப்பட்டது. விரிவாக்க பணிகள் முடிவடைந்த நிலையில், நிழற்கூடம் இல்லாததால், ஆசிரியர்கள், மாணவர்கள் பஸ்சுக்காக மழை மற்றும் வெயில் காலங்களில் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதுகுறித்து, பலமுறை வேண்டுகோள் விடுத்தும் பலனில்லை. பள்ளி அருகே, மீண்டும் நிழற்கூடம் அமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.