மர்ம நபர்கள் மிரட்டல்: பெற்றோர் சாலை மறியல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மர்ம நபர்கள் மிரட்டல்: பெற்றோர் சாலை மறியல்

Added : ஜூலை 18, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், தனியார் பள்ளி முன் குழந்தைகள், பெற்றோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குமாரபாளையம் - சேலம் பிரதான சாலை, தனியார் பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் இட உரிமையாளர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இடத்தை காலி செய்யும்படி இட உரிமையாளர்கள் வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பல நாட்களாக பள்ளி முன் காலை, 8:30 மணியளவில், மர்ம நபர்கள் சிலர் மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோரை வழிமறித்து, பள்ளி குறித்து அவதூறாக துண்டு பிரசுரங்களை வினியோகித்து, மிரட்டுவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக, பெற்றோர் சார்பில், கலெக்டரிடமும், குமாரபாளையம் போலீசாரிடமும் மனு அளிக்கப்பட்டது. ஆனால், இந்நிலை நீடித்ததால், ஆத்திரமடைந்த பெற்றோர், மர்ம நபர்கள் மற்றும் நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து, தங்கள் குழந்தைகளுடன், சேலம் சாலையில் நேற்று மாலை, திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். குமாரபாளையம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, கலைந்து சென்றனர். இதன் காரணமாக, சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை