ஆசிரியர் பணியிடம் நிரப்பாததால் பழங்குடியின மாணவியர் பாதிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர் பணியிடம் நிரப்பாததால் பழங்குடியின மாணவியர் பாதிப்பு

Added : ஜூலை 18, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: 'பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளதால், பழங்குடியின மாணவியரின் கல்வித்தரம் பாதிக்கப்பட்டுள்ளது' என, தமிழ்நாடு பழங்குடியினர் மலையாளி நல அமைப்பின், மாநில தலைவர் குப்புசாமி, டி.ஆர்.ஓ.,விடம் மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: முள்ளுக்குறிச்சியில், அரசு பழங்குடியினர் உறைவிட மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், ஆறு முதல், பிளஸ் 2 வரை, மொத்தம், 570 மாணவியர் படிக்கின்றனர். பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில், பாடப்பிரிவு வாரியாக ஆசிரியர்கள் இல்லாததால், மாணவியரின் கல்வி பாதிக்கப்படுகிறது. பல மாணவியர், வேறு பள்ளிக்கு சென்றுவிட்டனர். தமிழ், ஆங்கிலம், உயிரியல், கணினி அறிவியல், பொருளியல் ஆகிய துறைகளுக்கு, ஆசிரியர்கள் இல்லாததால், ஒரு ஆசிரியர் மட்டுமே பாடம் நடத்தி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆய்வுக்கூட வதியும் செய்து தரவில்லை. ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை