அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு

Added : ஜூலை 18, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், அதிக மதிப்பெண்கள் பெற்ற, மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. குமாரபாளையத்தில், ஆனந்த காயத்ரி நற்பணி மன்றம், பண்ணாரி மாரியம்மன் நற்பணி மன்றம், ஸ்டார் நண்பர்கள் குழு சார்பில், 10வது வார்டில், அதிக மதிப்பெண்கள் பெற்ற அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது. ஆனந்த காயத்ரி மன்ற நிர்வாகி மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். 10ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற ஆர்னிகா, லோகஸ்நேகா, சண்முக பிரியதர்ஷிணி, வீரசூரியன், 12ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற சுகுணராஜா, சுவலட்சுமி, யுவபிரியா மற்றும், 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு பதக்கங்கள், நோட்டுகள், கணித உபகரணங்கள் ஆகியவை வழங்கப்பட்டன. பெற்றோர், பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை