ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

Added : ஜூலை 18, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருச்செங்கோடு: குடிநீர் கேட்டு, திருச்செங்கோடு ஒன்றிய அலுவலகத்தை, காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டனர்.
திருச்செங்கோடு ஒன்றியம், திருமங்கலம் ஊராட்சி, சின்ன கோட்டப்பாளையத்தில், குடிநீர் கேட்டு, கடந்த சில நாட்களுக்கு முன், பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். அப்போது, உடனடியாக லாரிகள் மூலம் குடிநீர் வழங்குவதாகவும், இரு நாட்களில், புதிய ஆழ்துளை கிணறு அமைத்து தருவதாகவும் உறுதி அளித்த, வட்டார வளர்ச்சி அதிகாரிகள், குடிநீர் வினியோகிக்கவில்லை. இதை கண்டித்து, திருச்செங்கோடு ஒன்றிய அலுவலகத்தை, நேற்று, காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சங்கர், பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, கலைந்து சென்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை