நூற்பாலை பெண் ஊழியர் மர்மச்சாவு: கொலையா என போலீசார் விசாரணை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நூற்பாலை பெண் ஊழியர் மர்மச்சாவு: கொலையா என போலீசார் விசாரணை

Added : ஜூலை 18, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தி.கோடு: திருச்செங்கோடு அருகே, தனியார் நூற்பாலை ஊழியர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த, சிந்தம்பாளையம் அப்பியாக்காடு பகுதிக்கு அதிகாலையில் சென்ற மக்கள், ஆடைகள் கலைந்த நிலையில், பெண் சடலம் கிடந்ததை கண்டனர். அருகில் மது பாட்டில், கொத்து பரோட்டா பொட்டலம், இரண்டு பிளாஸ்டிக் டம்ளர்கள் இருந்தன. இதுகுறித்து, ரூரல் போலீசாருக்கு மக்கள் தகவல் கொடுத்தனர். திருச்செங்கோடு, டி.எஸ்.பி., ராஜூ தலைமையிலான போலீசார் விசாரித்தனர். அதில், கோழிக்கால்நத்தம் சாலையில் உள்ள, தனியார் நூற்பாலை ஊழியர் ஆதிலட்சுமி, 32, என்பதும், கணவர் இறந்து விட்ட நிலையில், தன், 11 மற்றும் எட்டாவது படிக்கும், இரண்டு மகன்கள், ஒன்பதாவது படிக்கும், ஒரு மகளோடு சிந்தம்பாளையம் அடுத்த, கொல்லப்பாளையத்தில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, மில்லுக்கு செல்வதற்காக வந்தவர், அந்த இடத்திற்கு எப்படி வந்தார், அவரை மிரட்டி கடத்தி வந்தார்களா அல்லது ஏற்கனவே பழக்கத்தில் இருந்த யாருடனாவது வந்தாரா, இறந்தது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மோப்ப நாய் பொய்கை, ஒரு கி.மீ., தள்ளி இருந்த, நூற்பாலை வரை ஓடி நின்றது. இந்த சம்பவம் சிந்தம் பாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை