பராமரிப்பில்லாத நேரு சிறுவர் பூங்கா: பயன்பாட்டுக்கு வர கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பராமரிப்பில்லாத நேரு சிறுவர் பூங்கா: பயன்பாட்டுக்கு வர கோரிக்கை

Added : ஜூலை 18, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ப.வேலூர்: ப.வேலூரில், நேரு சிறுவர் பூங்காவை பராமரிக்க கோரிக்கை எழுந்துள்ளது. ப.வேலூர் அடுத்த, சக்தி நகரில், நேரு பூங்கா உள்ளது. இது பலஆண்டுகளாக பராமரிப்பில்லாமல் உள்ளதால், அப்பகுதி சிறுவர்கள் அவதிக்குள்ளாகின்றனர் இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: பல ஆண்டுகளாக பராமரிப்பில்லாத இந்த பூங்கா, சிறுவர்களின் பொழுதுபோக்கிற்காக விளையாடுவதற்கு அமைக்கப்பட்டது. அங்கு இருந்த ஊஞ்சல்கள் காணாமல் போய்விட்டன. ஊஞ்சல் கம்பிகள் துருப்பிடித்து வீணாக கிடக்கின்றன. விஷ ஜந்துக்களின் நடமாட்டம் உள்ளதாக, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானதும், பூங்கா சுத்தப்படுத்தப்பட்டது. ஆனால், ஆறு மாதங்களுக்கு மேலாகியும், பூங்காவை பராமரிப்பதற்கான நடவடிக்கை எதுவும் இல்லை. இரவு நேரங்களில், சமூக விரோதிகளின் கூடாரமாக காட்சியளிக்கிறது. டவுன் பஞ்.,நிர்வாகம், பூங்காவை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை