கோவையில் 900 கிராம் நகை வழிப்பறி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவையில் 900 கிராம் நகை வழிப்பறி

Added : ஜூலை 18, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பெரியநாயக்கன்பாளையம்: கோவை மாவட்டம் தெலுங்குபாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன்,45. இவர் சொந்தமாக பட்டறை வைத்து, தங்க கட்டிகளை வாங்கிவந்து நகை செய்து கொடுத்து வருகிறார். கடந்த 10 நாளுக்கு முன்பு, ஊட்டியில் உள்ள நகைக்கடையில் 1181 கிராம் தங்க கட்டிகளை வாங்கி வந்தார். அதனை 10 நெக்லஸ், 2 மாங்கா மாலை செய்து நேற்று ஊட்டிக்கு கொண்டு செல்ல கிளம்பினார். மேட்டுப்பாளையம் பஸ்ஸ்டாண்டில் காத்து கொண்டிருந்த போது, காரில் வந்த 2 பேர் ஊட்டி செல்வதாக அழைத்தனர். ஈஸ்வரனும் நகைகளுடன் காரில் ஏறினார். வழியில் மத்தம்பாளையம் அருகே காட்டை பிரிவு வந்த போது, கத்தியை காட்டி, ஈஸ்வரனிடமிருந்த நகைகள், ரூ.900, மொபைல் ஆகியவற்றை பறித்து கொண்டு சென்றனர். இது தொடர்பாக ஈஸ்வரன் அளித்த புகாரின் பேரில், பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை