காவிரியில் தண்ணீர் இல்லாததால் ஆடி,1ல் வெறிச்சோடிய கூடுதுறை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காவிரியில் தண்ணீர் இல்லாததால் ஆடி,1ல் வெறிச்சோடிய கூடுதுறை

Added : ஜூலை 18, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பவானி: பவானி கூடுதுறையில், ஆடி, 1 அன்று பக்தர்கள் கூட்டமின்றி, வெறிச்சோடி காணப்பட்டது.


ஈரோடு மாவட்டம், பவானி சங்கமேஸ்வரர் கோவில் புகழ் பெற்றது. காவிரி, பவானி மற்றும் அமுத நதி சங்கமிப்பதால், தென்னகத்தின் காசி எனவும், முக்கூடல் சங்கமம், பரிகார ஸ்தலம் என, பெயர் பெற்றுள்ளது. ஆண்டுதோறும், ஆடி, 1 அன்று தலையாடி கொண்டாடும் புதுமண தம்பதியர், தங்களின் குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்களுடன் பவானி, சங்கமேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள கூடுதுறை காவிரி ஆற்றில் குளித்து விட்டு, படியில் படையல் இட்டு பூஜை செய்வர். பின்னர், தங்களது மனைவிக்கு மாங்கல்ய கயிறு கட்டி, சுவாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம். இந்தாண்டு, போதிய மழை இல்லாத காரணத்தால், மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைந்தது. நேற்று முதல் வினாடிக்கு, 1,200 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் வந்து கொண்டிருக்கிறது. போதிய அளவில் தண்ணீர் இல்லாத காரணத்தால், தலை ஆடி என அழைக்கப்படும் ஆடி, 1ல், (நேற்று) கூடுதுறைக்கு பக்தர்கள் குறைந்தளவே வந்தனர். மதியம் வரை, கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. அதே போல், புதுமண தம்பதியரை காண்பதும் அரிதாகவே இருந்தது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை