விளைச்சல், இருப்பு தொடர் சரிவு: மஞ்சள் விலை மேலும் உயர வாய்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விளைச்சல், இருப்பு தொடர் சரிவு: மஞ்சள் விலை மேலும் உயர வாய்ப்பு

Added : ஜூலை 18, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

ஈரோடு: ''விளைச்சல், இருப்பு சரிவதால், வரும் நாட்களில் தேவை அதிகரித்து, மஞ்சள் விலை மேலும் உயரும்,'' என, ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினர் வடிவேல் கூறினார்.
மேலும், அவர் கூறியதாவது: பல ஆண்டுகளுக்கு முன், தமிழகம், கர்நாடகா, ஆந்திரா என, மூன்று மாநிலங்களில்தான் மஞ்சள் விலையும். ஈரோடுதான் மிகப்பெரிய மஞ்சள் மார்க்கெட்டாக இருந்தது. தற்போது, 17 மாநிலங்களில் மஞ்சள் விளைகிறது. மஹாராஷ்டிராவில் ஆண்டுக்கு, ஒரு லட்சம் மூட்டை வந்த நிலை மாறி, நடப்பாண்டில், 30 லட்சம் மூட்டை விளைந்துள்ளது. நடப்பாண்டில் தமிழகத்தில், ஐந்து லட்சம் மூட்டை, கர்நாடகாவில், மூன்று லட்சம் மூட்டை, ஆந்திராவில், 25 லட்சம் மூட்டைகள் விளைந்துள்ளன. தவிர, பழைய மஞ்சள் ஈரோட்டில், 10 லட்சம் மூட்டை, ஆந்திராவில், 10 லட்சம் மூட்டை, மஹாராஷ்டிராவில், 20 லட்சம் மூட்டை என, 40 லட்சம் மூட்டைகள் உள்ளன. ஆடி, ஆவணி மாதம் இறுதி வரை, மஞ்சள் விதைப்பு காலமாகும். நடப்பாண்டு தமிழகம், ஆந்திரா, கர்நாடகாவில் போதிய மழையின்றி, குறைந்த அளவே சாகுபடி நடந்துள்ளது. இன்னும் ஆறு மாதங்களுக்கு பிறகே, புது மஞ்சள் வரத்தாகும். அதேநேரம், உள்ளூர் தேவை, வெளிநாட்டு ஏற்றுமதி அதிகரிக்கும்போது, விற்பனை வேகமாக நடக்கும். தற்போது, 9,000 ரூபாயை கடந்து மஞ்சள் விற்பனையாகிறது. கடந்த ஒரு மாதத்தில், 2,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. எனவே, வரும் நாட்களில் விலை தொடர்ந்து உயரும். ஆந்திராவில் அதிகமாக மஞ்சள் விளைந்ததால், விலை சரிந்துவிடக்கூடாது என்பதற்காக, ஆந்திரா அரசு, 200 கோடி ஒதுக்கீடு செய்து, கொள்முதல் செய்கிறது. இதேபோல, தமிழகம் மற்றும் கர்நாடகாவிலும் கொள்முதல் செய்திருந்தால், மேலும் விலை அதிகரித்திருக்கும். இருப்பினும், மஹாராஷ்டிராவில் நடப்பாண்டிலும் நல்ல மழை பெய்கிறது. தண்ணீர் பஞ்சமில்லை. எனவே, தேசிய அளவிலான தேவையை, வரும் ஆண்டில் மஹாராஷ்டிரா பூர்த்தி செய்வதுடன், விலை உயர்வு என்பது, விவசாயிகளுக்கு நம்பிக்கை தரும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை