வரதட்சணை கேட்டு மருமகன் கொடுமை: மின் கம்பத்தில் சங்கிலியால் கட்டிக்கொண்டு மாமனார் போராட்டம்| Dinamalar

வரதட்சணை கேட்டு மருமகன் கொடுமை: மின் கம்பத்தில் சங்கிலியால் கட்டிக்கொண்டு மாமனார் போராட்டம்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

கரூர்: கரூரில், மருமகன் வரதட்சணை கேட்டு மகளை கொடுமை செய்து வரும் நிலையில், அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ய மறுப்பதாக கூறி, மாமானர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சங்கிலி பூட்டி போராட்டம் நடத்தினர்.
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் மனு கொடுக்க, நேற்று, பள்ளப்பட்டி அடுத்த, கேர் நகரைச் சேர்ந்த ரஹமத்துல்லா, 65, வந்தார். திடீரென கலெக்டர் வளாக ரவுண்டான அருகில் உள்ள மின்கம்பத்தில், தன் உடலை இருப்பு சங்கிலியால் கட்டி, பூட்டு போட்டு பூட்டிக் கொண்டு, சாவியை உறவினரிடம் கொடுத்து அனுப்பி விட்டார். 'வரதட்சணை கொடுமை செய்யும் மருமகன் மீது நடவடிக்கை எடுங்கள்' எனக்கோரி போராட்டம் நடத்தினார். பசுபதிபாளையம் போலீசார், ரஹமத்துல்லா உடலில் சுற்றிய கம்பியை வெட்டி, அவரை மீட்டு கலெக்டர் கோவிந்தராஜிடம் மனு கொடுக்க அனுப்பி வைத்தனர்.

அவர், கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: என் மகள் உமாரா சுபானா, 20; பள்ளப்பட்டியைச் சேர்ந்த சாகுல்அமீது மகன் முகமதுபாரூக், 25, ஆகியோருக்கு, கடந்த, பிப்ரவரியில் திருமணம் நடந்தது. மருமகன் மற்றும் அவரது குடும்பத்தால், வரதட்சணை கேட்டு மகளுக்கு தொல்லை கொடுத்து வந்தனர். இதனால், மூன்று மாத கர்ப்பிணி என்று கூட பாராமல் துன்புறுத்தியதால், உமரா சுபானா என் வீட்டுக்கு வந்துவிட்டார். இந்நிலையில், கடந்த ஜூன், 26ல், மருமகன் முகமது பாரூக், அவரது தந்தை சாகுல் அமீது, தாய் ராபிய உள்ளிட்ட உறவினர்கள், எங்கள் வீட்டிற்கு வந்தனர். அங்கு, உமாரா சுபானவை தகாத வார்த்தைகளில் பேசினர். இதை தட்டிக் கேட்டதால், என்னை கொலை வெறியுடன் தாக்கினர். தொடர்ந்து, பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில், எனக்கு சிகிச்சைக்கு அளிக்கப்பட்டது. அரவக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷன், கரூர் எஸ்.பி., அலுவலகம் ஆகியவற்றில் புகார் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. வரதட்சணை கொடுமை செய்யும் மருமகன் மற்றும் அவரது குடும்பத்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.