கே.ஆர்.பி., அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: அவதானபட்டி பகுதியில் நெல் நடவு பணி ஆரம்பம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கே.ஆர்.பி., அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: அவதானபட்டி பகுதியில் நெல் நடவு பணி ஆரம்பம்

Added : ஜூலை 18, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

கிருஷ்ணகிரி: கே.ஆர்.பி., அணையில் இருந்து, முதல் போக சாகுபடிக்கு, தண்ணீர் திறந்து விடப்பட்டதையடுத்து, அவதானபட்டி பகுதியில், நெல் நடவு பணிகள் தொடங்கியுள்ளன.
கிருஷ்ணகிரி அடுத்த, கே.ஆர்.பி., அணையில் இருந்து கடந்த, 15ல் முதல் போக நெல் சாகுபடிக்கு, இடது மற்றும் வலது புற கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணையின் கீழ் பகுதியில் இடது புற கால்வாய் மூலம் பாசனம் பெறும் பெரியமுத்தூர், அவதானபட்டி, டேம் கூட்ரோடு ஆகிய பகுதிகளில், அணையில் இருந்து தண்ணீர் திறப்பை எதிர்நோக்கி கடந்த, 25 நாட்களுக்கு முன்பாக கிணற்று பாசனம் மூலம், நெல் நாற்றை விட்டு வைத்தனர். இந்நிலையில், நாற்றை பிடுங்கி நடுவதற்கான சரியான நேரத்தில், அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் அவதானபட்டி, பெரியமுத்தூர், டேம் கூட்ரோடு, திம்மாபுரம், சவுட்டஅள்ளி, மலையாண்டஅள்ளி ஆகிய பகுதிகளில், நேற்று முன்தினம் முதல் நெல் நடவு பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக, ஏற்கனவே விவசாயிகள், தங்கள் நிலங்களில் இயற்க்கை உரங்களான ஆடு மற்றும் மாட்டு சானங்களை கொட்டி, நிலத்தை உழுது தயார் நிலையில் வைத்திருந்தனர். அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டதையடுத்து, தற்போது நடவு பணிகள் நடந்து வருகின்றன. அவதானபட்டி பகுதியில் உள்ள விவசாயிகள், நடவுக்கு இயந்திரங்களை பயன்படுத்தாமல் பெண்களை கொண்டு, நடவு பணிகளை மேற்கொண்டுள்ளனர். இதே நேரத்தில், கே.ஆர்.பி., அணை பாசன பகுதியில் உள்ள பையூர், பென்னேஸ்வரமடம், காவேரிப்பட்டணம், வேலம்பட்டி, பையூர், பாளேகுளி ஆகிய இடங்களில், முதல் போக சாகுபடிக்கு தற்போதுதான் நெல் நாற்று விடும் பணிகள் தொடங்கியுள்ளன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை