குட்டி ஈன்ற பெண் யானை சாவு

Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

ஓசூர்: ஓசூர் வனக்கோட்டத்தில், குட்டி ஈன்ற பெண் யானை ஒன்று, மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், உரிகம் வனச்சரகத்திற்கு உட்பட்ட மஞ்சுகொண்டப்பள்ளி கிராமத்திற்கு அருகே, 22 வயது மதிக்கத்தக்க பெண் யானை இறந்து கிடந்தது. வனத்துறையினர், கால்நடை மருத்துவ குழுவினர் உதவியுடன், நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை செய்து, அதே இடத்தில் அடக்கம் செய்தனர். சேற்று நீரை குடித்ததால், வயிற்று போக்கு ஏற்பட்டு யானை உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாக, வனத்துறை தரப்பில் கூறப்படுகிறது. இறந்து போன பெண் யானை, கடந்த, 20 நாட்களுக்கு முன் தான் குட்டி ஈன்றுள்ளது. இந்த குட்டி, வனப்பகுதியில் தனியாக சுற்றித்திரிகிறது. அதை மற்ற யானைகள் கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இரு மாதங்களுக்கு முன், ஓசூர் வனக்கோட்டத்தில், குட்டி ஈன்ற பெண் யானை ஒன்று, மின்சாரம் தாக்கி உயிரிழந்து. சமீபத்தில் பெண் யானை குட்டி ஈன்ற சில நாட்களில் இறந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.