வனத்துறையினர் நண்பனாக காட்டெருமை 'மல்லிகா'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வனத்துறையினர் நண்பனாக காட்டெருமை 'மல்லிகா'

Added : ஜூலை 18, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சேலம்: வனத்துறையினரின் நண்பனாக உள்ள காட்டெருமையை, சுற்றுலா பயணிகள் ஆச்சரியமாக பார்த்துச் செல்கின்றனர்.
சேலம் மாவட்டம், ஏற்காட்டில், 2014ல், காட்டெருமை கன்று, காலில் அடிபட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடுவதாக, சுற்றுலா பயணிகள், சேலம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதிகாரிகள், உடனே சென்றனர். அப்போது, அங்குள்ள காப்பி தோட்டம் அருகே, பிறந்து ஐந்து நாட்களே ஆன காட்டெருமை கன்று, தன் தாயை பிரிந்து, வழி தெரியாமல் வந்தபோது, காலில் அடிபட்டு நடக்க முடியாமல் இருந்தது. கன்றை மீட்ட அதிகாரிகள், தங்கள் வாகனத்தில் ஏற்றி, சேலம், குரும்பப்பட்டியில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வந்தனர். அங்கு கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. கன்று என்பதால், அது தீவனம் உட்கொள்ளவில்லை. தண்ணீர் கூட குடிக்க முடியாத நிலையில் இருந்தது. மருத்துவர் அறிவுத்தல்படி, வனத்துறையினர் கன்றுக்கு, 'புட்டிபால்' கொடுத்தனர். குடிக்காமல் அடம் பிடித்த கன்றை, சமாதானப்படுத்திய வனத்துறையினர், பால் குடிக்க வைத்தனர். உடல் நலம் மெல்ல தேறிய கன்றுக்கு, 'மல்லிகா' என, வனத்துறையினர் பெயர் சூட்டினர். வனப்பாதுகாப்பு அதிகாரி முதல், கடைநிலை ஊழியர் வரை, அனைவரும் ஆசையுடன் வந்து, மல்லிகாவை பார்த்துச்செல்கின்றனர். இரு ஆண்டுகளாக, பூங்காவில் வனத்துறையினருடன் ஜாலியாக வலம் வந்த கன்றுக்கு, 2016ல் கால் முற்றிலும் சரியானது. இதையடுத்து, பூங்கா அருகே உள்ள வனப்பகுதியில், மல்லிகாவை சுதந்திரமாக காட்டிற்குள் விட்டனர். சில நாட்களில், அது ஒரு கன்றை ஈன்றது. தற்போது, காட்டெருமை மல்லிகாவுடன் கன்றும், தினமும் பூங்காவுக்கு வருகிறது. வனத்துறையினர் வழங்கும் உணவுகளை, சாப்பிட்டுச் செல்கின்றன. தன் உயிரை காப்பாற்றியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தினமும் பூங்காவுக்கு வந்து செல்லும் காட்டெருமையை, சுற்றுலா பயணிகள் ஆச்சரித்துடன் பார்த்துச்செல்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை