துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மேட்டூர் பத்மராஜன் வேட்புமனு தாக்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மேட்டூர் பத்மராஜன் வேட்புமனு தாக்கல்

Added : ஜூலை 18, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

மேட்டூர்: துணை ஜனாதிபதி தேர்தலில், போட்டியிட மேட்டூரை சேர்ந்த, பத்மராஜன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகா, வீரக்கல்புதூர் பேரூராட்சி, இரட்டை புளியமரத்தூரை சேர்ந்தவர் பத்மராஜன், 58. இவர் கடந்த, 1988ல், முதன்முறையாக, மேட்டூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட, வேட்புமனு தாக்கல் செய்தார். தொடர்ந்து, 29 ஆண்டுகளாக உள்ளாட்சி முதல், ஜனாதிபதி தேர்தல் வரையிலும் போட்டியிட, 179 முறை வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கு போட்டியிட கடந்த ஜூன், 15ல், 180 வது முறையாக பத்மராஜன் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில், நேற்று டில்லியில் பத்மராஜன், துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக, 181வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்தார்.

பத்மராஜன் கூறியதாவது: துணை ஜனாதிபதி தேர்தல் ஆகஸ்ட், 5ல் நடக்கிறது. தேர்தலில் போட்டியிட, 21 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், 22 வது நபராக நான் வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். இதுவரை, மூன்று முறை ஜனாதிபதி தேர்தலுக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். தற்போது வேட்புமனு தாக்கல் செய்வது, நான்காவது முறையாகும். ஜனாதிபதி தேர்தலுக்கு போட்டியிட குறைந்தபட்சம், 120 எம்.பி.,க்கள் அல்லது எம்.எல்.ஏ.,க்கள் முன்மொழிய வேண்டும். எனக்கு அவ்வளவு பேர் முன்மொழிய வாய்ப்பில்லை. எனது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டு விடும். எனினும், இந்தியாவில் அதிகமுறை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தது, நான்தான் என்பதில் பெருமைப்படுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை