மேட்டூர் நகராட்சியில் சுகாதார பணிகள் மந்தம்: சப்-கலெக்டரையும் விட்டு வைக்காத காய்ச்சல்| Dinamalar

மேட்டூர் நகராட்சியில் சுகாதார பணிகள் மந்தம்: சப்-கலெக்டரையும் விட்டு வைக்காத காய்ச்சல்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

மேட்டூர்: மேட்டூர் நகராட்சியில், சுகாதாரப் பணிகள் மந்தமாக நடப்பதால், அதிகாரிகள், அரசு மருத்துவமனை டாக்டர், நர்ஸ்கள் காய்ச்சலால் பாதித்துள்ளனர்.
மேட்டூர் நகராட்சியில், 30 வார்டுகள் உள்ளன. சுற்றுப்பகுதியில், மர்மக் காய்ச்சலால் மக்கள் பாதித்ததை தொடர்ந்து, தடுப்பு நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. மேலும், வீதி, வீதியாக மாலதியான் எனப்படும் மருந்தும், வீடு, வீடாக சென்று, பைரோப்ரின் மருந்தும் தெளிக்க வேண்டும் என, சுகாதார அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. எனினும், காய்ச்சல் பரவாமல் தடுக்க, கொசு மருந்து அடிக்கும் பணி மந்தகதியில் உள்ளது. மேட்டூர் அரசு மருத்துவமனையில், மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட, 20க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், காய்ச்சலுக்கு சிகிச்சை அளித்த, உறைவிட மருத்துவர் சுகந்தி, நர்ஸ்கள் லூசியா, சந்தோசம் உள்பட, ஐந்து பேருக்கு காய்ச்சல் பரவியதால், அவர்கள் சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். டாக்டர், நர்ஸ்கள் மட்டுமின்றி, மேட்டூர் சப்-கலெக்டர் மேகநாதரெட்டியையும் மர்மக் காய்ச்சல் விட்டு வைக்கவில்லை. பரிசோதனையில், சப்-கலெக்டரை பாதித்தது சாதாரண வைரஸ் காய்ச்சல்தான் என்பது தெரியவந்தது.

மேட்டூர் நகராட்சி ஆணையாளர் நாராயணன் கூறியதாவது: மேட்டூர் நகராட்சியில், சுகாதார ஊழியர்கள் வீதிகளில், கொசு மருந்து தெளிக்கின்றனர். வரும் நாட்களில், இந்த பணி மேலும் தீவிரப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.