துண்டு பிரசுரம் வினியோகித்த மாணவி குண்டர் சட்டத்தில் கைது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

துண்டு பிரசுரம் வினியோகித்த மாணவி குண்டர் சட்டத்தில் கைது

Added : ஜூலை 18, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கன்னங்குறிச்சி: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நடக்கும் போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு, துண்டு பிரசுரம் வினியோகித்த மாணவியை, குண்டர் தடுப்பு சட்டத்தில், போலீசார் கைது செய்தனர்.
சேலம், வீராணத்தைச் சேர்ந்த மாதையன் மகள் வளர்மதி, 23; இதழியல் படிக்கும் கல்லூரி மாணவியான இவர், மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த பழனிவேலுவின் உறவினர். இந்திய மக்கள் முன்னணியை சேர்ந்த சாலமனுடன், பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார். கடந்த, 12ல், சேலம், கோரிமேட்டில் உள்ள அரசு கலைக்கல்லூரியில், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், ?ஹட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நடத்தப்படும் போராட்டத்துக்கு ஆதரவு கேட்டும், கல்லூரி மாணவ, மாணவியரிடம் துண்டு பிரசுரம் வினியோகித்தார். அவரை, அம்மாபேட்டை போலீசார் கைது செய்தனர். அவர் மீது, கடலூர் மாவட்டம், அண்ணாமலை நகர்; கரூர் மாவட்டம், குளித்தலை; சேலம் மாவட்டம், பள்ளப்பட்டி, டவுன்; கோவை, ரேஸ்கோர்ஸ் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில், வழக்குகள் பதிவாகியுள்ளன. நக்சலைட், மாவோயிஸ்ட் அமைப்புகளுடன் நெருக்கமாக உள்ள வளர்மதி, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில், தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டதால், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, கன்னங்குறிச்சி போலீசார் பரிந்துரைத்தனர். அதை ஏற்று, சேலம் போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் உத்தரவிட்டார். அதன் நகல், சேலம் பெண்கள் கிளை சிறையில் உள்ள வளர்மதியிடம், நேற்று போலீசார் வழங்கினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை