உதவித்தொகை வழங்காத மின்வாரியம்: பழகுனர் பயிற்சி பெற்றவர்கள் புலம்பல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உதவித்தொகை வழங்காத மின்வாரியம்: பழகுனர் பயிற்சி பெற்றவர்கள் புலம்பல்

Added : ஜூலை 18, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சேலம்: உதவித்தொகை வழங்காமல், மின்வாரியம், இரண்டாண்டுகளாக போக்குகாட்டுவதாக, பழகுனர் பயிற்சி பெற்றவர்கள் புலம்புகின்றனர்.
மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள, ஐ.டி.ஐ.,(எலக்ட்ரீசியன்,ஒயர்மேன்) முடித்தவர்களில், 20 சதவீதம் பேரை, ஆண்டுதோறும் தேர்வு செய்து, அவர்களுக்கு, தமிழக மின்வாரியம், ஓராண்டு பழகுனர் (அப்ரண்டீஸ்) பயிற்சி அளிக்க வேண்டும். சேலம் மின் வட்டம் சார்பில், கடந்த இரு ஆண்டுகளாக பழகுனர் பயிற்சி அளிக்காத காரணத்தால், ஐ.டி.ஐ., படித்த இளைஞர்கள், வேலைவாய்ப்பு பெறுவது, பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அத்துடன், 2014-15ல், பயிற்சி முடித்தவர்களுக்கு, இன்னமும், உதவித்தொகை முழுமையாக வழங்காமல், வாரியம் அலைகழிப்பதாக, அடுத்த புகார் எழுந்துள்ளது. பயிற்சி காலத்தில், எலக்ட்ரீசியன், ஒயர்மேன்கள், 32 பேருக்கு, தலா, 7,709 ரூபாய் வீதம், பயிற்சி அளிக்கும் உதவி பொறியாளர் அலுவலகத்திலேயே, உதவித்தொகை மாதந்தோறும் வழங்க வேண்டும். அதில், 2,800 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது. நிலுவை வைத்துள்ள தலா, 4,909 ரூபாயை, இரண்டாண்டுகளாக ஏன் வழங்கவில்லை என, கேள்வி எழுப்பி உள்ளனர். நிலுவைத்தொகை வழங்க, கடந்த மே, 17ல், உத்தரவிட்டும் இதுவரை கிடைக்கவில்லை. மத்திய அரசு, பயிற்சிக்கான பங்களிப்பாக, 50 சதவீத நிதி ஒதுக்கியும், வாரியம், 50 சதவீத பங்களிப்பு நிதியை ஒதுக்கியும், நிலுவைத்தொகை வழங்காமல் உள்ளது.

மேற்பார்வைபொறியாளர் மணிவண்ணன் கூறியதாவது: நிதி வந்ததும், நிலுவை உதவித்தொகை வழங்கப்படும். பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை