போலீஸ் இரண்டாம் நிலை காவலர் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜூலை 27ல் உடல் தகுதி தேர்வு

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சேலம்: போலீஸ் இரண்டாம் நிலை காவலர்களுக்கான, எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற, 90 ஆயிரம் பேருக்கு, உடல் தகுதி தேர்வு ஜூலை, 27ல் துவங்குகிறது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வாயிலாக, இரண்டாம் நிலை காவலர்கள் என்ற நிலையில், காவல்துறைக்கு, 13 ஆயிரத்து, 137; சிறைத்துறைக்கு, 1,015, தீயணைப்புத்துறைக்கு,1,512, பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் பெண்களுக்கு,47; உள்ளிட்ட மொத்தம், 15 ஆயிரத்து,711 காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வுக்கு, ஜன.,23ல் அறிவிப்பு வெளியானது. தேர்வுக்கு, 6.32 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்ததில், மே, 21ல், நடந்த, எழுத்து தேர்வில், 4.82 லட்சம் பேர் கலந்து கொண்டனர். தேர்வு முடிவு, ஜூலை, 7 இணையதளத்தில் வெளியானது.இதில், வெற்றி பெற்ற, 90 ஆயிரம் பேருக்கு, உடல் தகுதி தேர்வுகள், ஜூலை, 27ல் துவங்குகிறது. தமிழகம் முழுவதும் போலீசின், 12 சரகங்களில், 11 இடங்களில் உடல் தகுதி தேர்வு நடக்கிறது. சேலம் மாவட்டத்தில் வெற்றி பெற்ற, 3,344 பேர், நாமக்கல், 1,263 பேர் என, மொத்தம், 4,007 பேருக்கு, சேலம், குமாரசாமிப்பட்டியில் உள்ள மாவட்ட போலீஸ் ஆயுதப்படையில், தேர்வு நடக்கிறது. இதற்கான அனுமதி கடிதங்களை, www.tnusrbonline.org என்ற இணையதளத்தில், பதவிறக்கம், செய்து, தேர்வில் கலந்து கொள்ளலாம். போலீஸ் சார்பில், அந்தந்த ஸ்டேஷன்களில் இருந்து, வெற்றி பெற்றவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது.

இன்ஸ்பெக்டர் ஒருவர் கூறியதாவது: போலீஸ் இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான உடல் தகுதி தேர்வுகள், ஜூலை, 27ல், டி.ஐ.ஜி.,க்கள் தலைமையில், எஸ்.பி.,க்கள் முன்னிலையில் நடத்தப்படுகிறது. முதலில் சான்றிதழ் சரி பார்க்கப்பட்டு, 1,500 மீட்டர் ஓட்டம், நீளம், உயரம் தாண்டுதல், கயிறு ஏறுதல் ஆகிய தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.