சேலம் மத்திய சிறை கைதிகள் மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சேலம் மத்திய சிறை கைதிகள் மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல்

Added : ஜூலை 18, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்: சேலம் மத்திய சிறையில், இரண்டு கைதிகள், தனி அறையில் அடைக்கப்பட்டதை கண்டித்து, அரச மரத்தில் ஏறி, தற்கொலை மிரட்டல் விடுத்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
சேலம், அஸ்தம்பட்டியை சேர்ந்த பிரபல ரவுடி எலும்பன் கார்த்திக், 35. ஆட்டையாம்பட்டியை சேர்ந்த செந்தில், 40, ஆகியோரை போலீசார் குற்றவழக்கில் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். சிறை அதிகாரிகள், கடந்த வாரம் சோதனை செய்ததில், எலும்பன் கார்த்தி, செந்தில் ஆகியோரிடம் இருந்து, மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, இருவரும், தனி அறையில் அடைக்கப்பட்டனர். அதிர்ச்சியடைந்த சக கைதிகளான, நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தை சேர்ந்த வினோத், 24, பரமத்தி வேலூரை சேர்ந்த சிவராஜ், 22, ஆகியோர், இதை கண்டித்தும், தனி அறையில் உள்ள அவர்களை விடுவிக்க கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை அதிகாரிகள் ஏற்க மறுத்து விட்டனர். இந்நிலையில் நேற்று காலை, 11:30 மணிக்கு ஒன்பதாவது பிளாக் முன்பகுதியில் உள்ள அரச மரத்தில் வினோத், சிவராஜ் ஆகியோர் ஏறி, தற்கொலை மிரட்டல் விடுத்தனர். சிறை கண்காணிப்பாளர் ஆண்டாள், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து மதியம், 2:30 மணிக்கு தங்களின் போராட்டத்தை வாபஸ் பெற்று, மரத்தில் இருந்து இறங்கி, அதிகாரிகளிடம் மன்னிப்பு கேட்டனர். இந்த சம்பவத்தால், சிறை கைதிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை