தண்ணீர் பிடிப்பதில் தகராறு: விவசாயி வெட்டி கொலை

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

ஆத்தூர்: தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில், மொபட்டில் சென்ற விவசாயி அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, தென்னங்குடிப்பாளையம் ஊராட்சி, மேட்டுத்தெருவை சேர்ந்தவர் விவசாயி கிருஷ்ணன், 55. இவரும், பக்கத்து வீட்டை சேர்ந்த லாரி டிரைவர் சுருளி, 36, என்பவரும் இணைந்து சில ஆண்டுகளுக்கு முன், குடிநீர் குழாய் போட்டுள்ளனர். அந்த குழாயில் இருந்து, சுருளியின் குடும்பத்தினர், அதிகளவில் தண்ணீர் எடுத்துக் கொள்வதாக கூறி, இருதரப்பினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த, 14ல், தண்ணீர் பிடிக்கும்போது மீண்டும் தகராறு ஏற்பட்டது. இது குறித்து கிருஷ்ணன், ஆத்தூர் போலீசில் புகார் செய்தார். நேற்று முன்தினம் இரு தரப்பினரிடம் போலீசார் விசாரணை நடத்தி, எச்சரித்து அனுப்பினர். நேற்று காலை, 8:00 மணியளவில் மீண்டும் தகராறு ஏற்பட்டது. கிருஷ்ணன், 'டிவிஎஸ் - எக்ஸ்.எல்., சூப்பர்' மொபட்டில் ஆத்தூருக்கு சென்றார். காலை, 9:30 மணியளவில், நரசிங்கபுரம் அணைமேடு வழியாக வந்த கிருஷ்ணனை வழிமறித்த சுருளி, விரட்டிச் சென்று அரிவாளில் சரமாரியாக வெட்டினார். கிருஷ்ணன் கழுத்து, தலை, உடல் என ஆறு இடங்களில் வெட்டியதால், ரத்த வெள்ளத்தில் விழுந்து, துடி துடித்து உயிரிழந்தார். ஆத்தூர் போலீசார், கிருஷ்ணனை வெட்டி கொலை செய்த சுருளியை கைது செய்தனர். இறந்த கிருஷ்ணனின் மனைவி பெரியம்மாள், 50. இவருடைய மகன் குமார், 32, சென்னை உயர்நீதிமன்றத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.