காமன்வெல்த் ஈட்டி எறிதல் போட்டி: ஒடுக்கத்தூர் மாணவி பங்கேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காமன்வெல்த் ஈட்டி எறிதல் போட்டி: ஒடுக்கத்தூர் மாணவி பங்கேற்பு

Added : ஜூலை 18, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வேலூர்: இங்கிலாந்து நாட்டில், இளைஞர்களுக்கான காமன்வெல்த், ஈட்டி எறிதல் போட்டியில் ஒடுக்கத்தூர் மாணவி பங்கேற்கிறார்.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த, மடையாப்பட்டு கிராமத்தை சேர்ந்த விவசாயி நீலகண்டன். இவரது மகள் ஹேமமாலினி, 18. இவர், ஒடுக்கத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 முடித்து விட்டு தற்போது, பொறியியல் படிக்க விண்ணப்பித்துள்ளார். இவர் ஏற்கனவே ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்று, தேசிய அளவில் மூன்று தங்க பதக்கம், மூன்று வெள்ளி பதக்கம் மற்றும் ஒரு வெண்கல பதக்கம் பெற்றுள்ளார். தென்னிந்திய அளவில், மூன்று தங்கம், மாநில அளவில், 11 தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் மாவட்ட அளவிலான போட்டியில், 102 பதக்கங்கள் பெற்றுள்ளார். இவர் பிளஸ் 1 படிக்கும் போது, 2016ல், துருக்கி நாட்டில் உலகப்பள்ளி அளவில் நடந்த ஈட்டி எறிதல் போட்டியில், ஏழாவது இடம் பெற்றார். அதே ஆண்டில், தென்னிந்திய மற்றும் மாநில அளவில், 16 வயது முதல், 18 வயதுக்குட்பட்டோர் பிரிவில், 12 பதங்கங்கள் பெற்றுள்ளார். இந்நிலையில், இங்கிலாந்து நாட்டில், பகாமஸ் என்ற இடத்தில், வரும், 20 முதல், 27 வரை காமல்வெல்த் இளைஞர்களுக்கான தடகள போட்டி நடக்கிறது. இதில், ஈட்டி எறிதலில் பங்கேற்க மாணவி ஹேமமாலினி தகுதி பெற்றுள்ளார். இவர், பங்கேற்கும் போட்டி வரும், 20ல் நடக்கிறது. இதற்காக இவர், இங்கிலாந்து நாட்டுக்கு நேற்று புறப்பட்டு சென்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை