குடியாத்தம் அருகே யானைகள் அட்டகாசம்: 10 ஏக்கர் பயிர் நாசம்: விவசாயிகள் சோகம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குடியாத்தம் அருகே யானைகள் அட்டகாசம்: 10 ஏக்கர் பயிர் நாசம்: விவசாயிகள் சோகம்

Added : ஜூலை 18, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வேலூர்: குடியாத்தம் அருகே, யானைகள் அட்டகாசத்தால், பத்து ஏக்கர் பயிர்கள் நாசமாயின. இதனால், விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே, மோர்தானா, சைனகுண்டா, கொட்டமிட்டா, தனகொண்டபள்ளி, குட்டமட்டா ஆகிய கிராமங்கள், ஆந்திரா மாநிலம், பலமனேர் வனப்பகுதியையொட்டி உள்ளது. அங்கிருந்து, கூட்டம், கூட்டமாக வரும் யானைகள், தமிழக பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. கடந்த, 15ல், பலமனேரில் இருந்து, மூன்று குட்டி யானைகளுடன் வந்த, 17 யானைகள், குடியாத்தம் அருகே மோர்த்தானா, ஆம்பூரான்பட்டி ஆகிய கிராமங்களில் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள், மோர்த்தானா, சைனகுண்டா, தனகொண்டபள்ளி, மோடிகுப்பம் ஆகிய கிராமங்களில் புகுந்து, அங்கு, பத்து ஏக்கரில் உள்ள மா, தென்னை, வாழை பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இதனால், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கேயே முகாமிட்டுள்ள யானைகளை விரட்ட, குடியாத்தம் வனத்துறை அதிகாரிகளுக்கு, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். யானைகள் எப்போது வேண்டுமானாலும் தங்கள் பகுதிக்குள் வரலாம் என்பதால், சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் சோகத்தில் உள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை