கள்ளச்சாராய பாக்கெட்டுடன் வந்து கலெக்டரிடம் மனு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளச்சாராய பாக்கெட்டுடன் வந்து கலெக்டரிடம் மனு

Added : ஜூலை 18, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தஞ்சாவூர்: டாஸ்மாக் கடை அமைக்கக் கோரி, கள்ளச்சாராய பாக்கெட்டுடன், தஞ்சை கலெக்டரிடம் கிராம மக்கள் மனு கொடுக்க வந்தது, பரபரப்பை ஏற்படுத்தியது.
தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. திருவையாறு அருகே நடுக்காவேரி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், கலெக்டர் அண்ணாதுரையிடம் அளித்த மனு: நடுக்காவேரி மெயின் ரோட்டில் இயங்கி வந்த டாஸ்மாக் கடை, நடுப்படுகை இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த இடத்தில் கடை அமைவதால், யாருக்கும் எவ்வித சிரமமும் இல்லை. குறிப்பாக, 3 கி.மீ., சுற்றளவிற்கு வீடுகளே இல்லை. ஆனால், சிலரது தூண்டுதல் காரணமாக, இந்த கடையை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், இந்த பகுதியில் கள்ளச்சாராயம் பெருகிவிட்டது. எனவே, கள்ளச்சாராயத்தை ஒழிக்க டாஸ்மாக் கடை அமைய வேண்டும். மேலும், சிலர் புதுச்சேரியில் இருந்து, போலி மதுபானங்களை கொண்டு வந்தும் விற்பனை செய்கின்றனர். எனவே, நடுக்காவேரியில் டாஸ்மாக் கடை அமைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த போது, பிளாஸ்டிக் பையில் கள்ளச்சாராயத்தை ஆண்களும், பெண்களும் ஏந்தி வந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை