கிணற்றில் கல் விழுந்து இருவர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிணற்றில் கல் விழுந்து இருவர் பலி

Added : ஜூலை 18, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே, கிணறு ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்ட, இரு தொழிலாளர்கள் கற்கள் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், காரை கிராமத்தில், நேற்று காலை, தனியாருக்கு சொந்தமான கிணற்றை ஆழப்படுத்தும் பணியில், நான்கு தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, தூர்வாரிய கற்களை, கிணற்றின் மேல் பகுதியில் போட்டு வைத்திருந்தனர். திடீரென அந்த கற்கள் சரிந்து, கிணற்றுக்குள் வேலை பார்த்த தொழிலாளர்கள் மீது விழுந்தது. இதில், 40 50 வயதுடைய இரு தொழிலாளர்கள், விழுந்த கற்களில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதில், மற்ற இருவரும் படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து பாடாலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை