பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற அவகாசம் வழங்க மத்திய அரசு மறுப்பு| Dinamalar

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற அவகாசம் வழங்க மத்திய அரசு மறுப்பு

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
பழைய ரூபாய் நோட்டு, Old rupee note,சுப்ரீம் கோர்ட்,  Supreme Court,மத்திய அரசு, Central Government, புதுடில்லி, New Delhi,  வங்கி, Banking,

புதுடில்லி: பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள மீண்டும் அவகாசம் வழங்க முடியாது என மத்திய அரசு கூறியுள்ளது.


உத்தரவு:

கடந்த வருடம் நவம்பர் மாதம் 8 ம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டன. இந்த நோட்டுகளை 2016 டிசம்பர் 31 வரை வங்கிகளில் செலுத்தி மாற்றி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. பின்னர் இந்த திட்டத்தின் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், பிரச்னை காரணமாக குறிப்பிட்ட காலத்திற்குள் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாதவர்களுக்கு கால அவகாசம் வழங்குவது குறித்து பரிசீலனை செய்து முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.


தவறாக பயன்படுத்தப்படும்:

இந்நிலையில், இந்த வழக்கில் மத்திய அரசு சார்பில் அபிடவிட் தாக்கல் செய்துள்ளது.அதில், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற கால அவகாசம் வழங்கினால், அது தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. இதனால், மீண்டும் கால அவகாசம் வழங்க முடியாது. மீண்டும் கால அவகாசம் வழங்கினால், ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தின் முக்கிய நோக்கம் மற்றும் கறுப்பு பணம் ஒழிப்பு திட்டம் ஆகியவை தோல்வியடைந்து விடும். பழைய நோட்டுகளை வைத்திருப்பவர்கள், இந்த அவகாசத்தில், தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை பொய்யான காரணங்களை கூறி மாற்றுவார்கள். பழைய நோட்டுகளை சட்ட விரோதமாக விற்பனையும் செய்வார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-ஜூலை-201717:45:46 IST Report Abuse
அப்பாவி இவிங்க ஆளுங்க எல்லாம் ப்ளான் போட்டு, ஸ்கெட்ச் போட்டு பழைய பணத்தை எல்லாம் மாத்திட்டாங்க... கணக்கு பண்ணி மாத்துன பணத்தை இன்னும் எண்ணி முடிக்கலியாம்... கணக்கில்லாமல் இவிங்க பணத்தைக் கொட்டியதைத்தான் இன்னும் எண்ண முடியல... புரியுதா?
Rate this:
Share this comment
Cancel
CHANDRA GUPTHAN - doha,கத்தார்
18-ஜூலை-201712:31:34 IST Report Abuse
CHANDRA GUPTHAN சபாஷ் இது தான் எதிர்பார்த்தேன். இந்த திட்டம் தோல்வி என்றாலும் கவலைப்படவேண்டாம். வெச்ச ஆப்பை எடுக்கவே கூடாது. மேலும் சிலபல ஆப்புகளை வேண்டுமானாலும் அடிக்கலாம். சொம்பு + பச்சை+ பாவாடைகள் சாவது பற்றி நமக்கு கவலை இல்லை. நாடு திருந்தவேண்டும் என்றால் சில பேரை பலி கொடுப்பது தவறில்லை............ ஜெய் ஹிந்த் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.