நீட் விவகாரம்: சட்டசபையிலிருந்து திமுக வெளிநடப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

நீட் விவகாரம்: சட்டசபையிலிருந்து திமுக வெளிநடப்பு

Updated : ஜூலை 18, 2017 | Added : ஜூலை 18, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சென்னை: சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசும் போது, நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவது தொடர்பாக, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார்.இதுனை தொடர்ந்து திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த விளக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.பின்னர் ஸ்டாலின் அளித்த பேட்டி: நீட் தேர்வால், கிராமப்புற மாணவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு விவகாரம்போல், நீட் தேர்விலும் அழுத்தம் கொடுத்து ஒப்புதல் பெற வேண்டும். துணை ஜனாதிபதி தேர்தலை பயன்படுத்தி, மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும். நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்களுடன் ஜனாதிபதியை சந்திக்க வேண்டும். இந்த விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரின் பதில் திருப்தி அளக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.



நீட் விவகாரம்: சட்டசபையிலிருந்து திமுக வெளிநடப்பு

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
18-ஜூலை-201712:37:56 IST Report Abuse
நாஞ்சில் நாடோடி சட்ட சபைக்கு தி மு க உறுப்பினர்களே தேவை இல்லை...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை