‛‛முடிவெடுத்தால் நான் முதல்வர்'': கட்சிகளுக்கு கமல் கவிதை பதில்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

‛‛முடிவெடுத்தால் நான் முதல்வர்'': கட்சிகளுக்கு கமல் கவிதை பதில்

Updated : ஜூலை 19, 2017 | Added : ஜூலை 18, 2017 | கருத்துகள் (200)
Advertisement

சென்னை: என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விரைவில் அறிவிப்புவரும் நடிகர் கமல்ஹாசன் கூறினார்.மேலும் கவிதை மூலம் தனது ரசிகர்களை உசுப்பிவிட்டுள்ளார்தமிழகத்தில் ஊழல் அதிகரித்துவிட்டதாக கடந்த வாரம் நடிகர் கமல் பேட்டி ஒன்றில் கூறினார். இதற்கு அமைச்சர்கள் சிலர் நடிகர் கமலை கடுமையாக விமர்சித்து வந்த வண்ணம் உள்ளனர். ஜெயலலிதா இருந்த போது வாய் திறக்காத கமல் இப்போது வாய் திறக்கிறார் என்றனர்.


விரைவில் அறிவிப்பு

இது தொடர்பாக நடிகர் கமல் டுவீட்டரில் கூறியது, நேற்று முளைத்த காளான்கள் போல் என் மீதான விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் விரைவில் உண்மை என்ற வெயிலில் காய்ந்து போகும். இது போன்ற. குற்றச்சாட்டுகளை அமைதிப்படுத்தும் வகையில் விரைவில் அறிவிப்பு வெளிவரும் என்றார்.


கவிதை மூலம் பதிலடி

இடித்துரைப்போம் யாருமினி மன்னரில்லை
துடித்தொழுவோம் மனதளவில் உம்போல் யாம்
மன்னரில்லை.
தோற்றிறந்தால் போராளி
முடிவெடுத்தால் யாம் முதல்வர்
அடி பணிவோர் அடிமையரோ?
முடி துறந்தோர் தோற்றவரோ?
போடா மூடா எனலாம் அது தவறு
தேடாப் பாதைகள் தென்படா
வாடா தோழா என்னுடன்
மூடமை தவிர்க்க முனைவரே தலைவர்
அன்புடன்
நான்....இவ்வாறு கவிதை மூலம் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (200)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஏடு கொண்டலு - Cupertino,யூ.எஸ்.ஏ
23-ஜூலை-201723:06:05 IST Report Abuse
ஏடு கொண்டலு மற்றவை எப்படியோ... இவர் கவிதை என்ற பெயரில் பிதற்றுவது சகிக்கவில்லை. கிரேசி மோகன் போன்ற ஜால்றாக்கள் இவரை ரொம்ப ஏற்றி விட்டுவிட்டார்கள். இவர் மனதில் தன்னை பாரதியார் அளவுக்கு நினைத்துக் கொண்டு நம்மைக் கொல்கிறார்.
Rate this:
Share this comment
Cancel
Pillai Rm - nagapattinam,இந்தியா
20-ஜூலை-201710:31:30 IST Report Abuse
Pillai Rm இந்த வயோதிக வாலிபருக்கு ஒரு கேள்வி ...எல்லா துறையும் ஊழல் இல்லாம சிறப்பா செயல்படுற ஒரு இந்தியா ஸ்டேட்ட சொல்லு...
Rate this:
Share this comment
Jayaraman Pichumani - Coimbatore,இந்தியா
21-ஜூலை-201700:53:50 IST Report Abuse
Jayaraman Pichumaniஒட்டு மொத்தமா இந்த நாடு மோசம்தான். அதற்கு காரணம் பேராசை பிடித்த சோம்பேறிகளான மக்களும், அவர்களின் குணத்தை சரியாகப் பயன்படுத்தி பல லட்சம் கோடிகள் குவிக்கும் அரசியல்வாதிகளும்தான்....
Rate this:
Share this comment
Cancel
Shanu - Mumbai,இந்தியா
19-ஜூலை-201717:24:41 IST Report Abuse
Shanu மக்கள் தான் முடிவெடுப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X