டோல்கேட்டில் 3 நிமிடங்கள் காத்திருப்பா.. கட்டணம் செலுத்த தேவையில்லை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

டோல்கேட்டில் 3 நிமிடங்கள் காத்திருப்பா.. கட்டணம் செலுத்த தேவையில்லை

Added : ஜூலை 19, 2017 | கருத்துகள் (30)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
டோல்கேட், Tollgate, 3 நிமிடங்கள்,  3 Minutes,கட்டணம், Fee,  புதுடில்லி, New Delhi, ஆர்.டி.ஐ, RTI, மத்திய அரசு, Central Government, தேசிய நெடுஞ்சாலை,National Highway,  கார், Car, லாரி , Larry, வழக்கறிஞர், Advocate, ஹரி ஓம் ஜிண்டால் , Hari Om Jindal,

புதுடில்லி: டோல்கேட்டில் 3 நிமிடங்களுக்கு மேல் காத்திருந்தால் சுங்க கட்டணம் செலுத்த தேவையில்லை என்ற தகவல், ஆர்.டி.ஐ.,யின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.


டோல்கேட் கட்டணம்


3நிமிடங்களுக்கு மேல் காத்திருப்பு:சுங்க கட்டணம் இல்லை

ஒரு மாவட்டத்திலிருந்து வேறு மாவட்டத்திற்கோ அல்லது மாநிலத்திற்கோ சாலையில் பயணிக்கும் போது தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல்கேட்டுகளில் கண்டிப்பாக கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டணம் கார், லாரி என வாகனத்தை பொறுத்து மாறுபடும்.

இந்நிலையில் டோல்கேட்டுகளில் வசூலிக்கப்படும் கட்டண விவரங்கள் குறித்து பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹரி ஓம் ஜிண்டால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்(ஆர்.டி.ஐ.,) கேள்வி கேட்டிருந்தார்.


மத்திய அரசு அளித்த விளக்கம்:

டோல்கேட்டில் வசூலிக்கப்படும் கட்டணத்துக்கு வரி இல்லை. சேவை கட்டணமாகவே அவை வசூலிக்கப்படும். டோல்கேட்டில் மூன்று நிமிடங்களுக்கு மேல் வாகனத்தில் காத்திருந்தால் அவர்கள் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலின்படி, டோல்கேட்டில் 3 நிமிடத்திற்கு மேல், மிக நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாகனங்கள் கட்டணம் செலுத்தத் தேவை இல்லை என தெரியவருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vasanth Kumar - Chennai,இந்தியா
19-ஜூலை-201714:02:46 IST Report Abuse
Vasanth Kumar அரசாங்கம் இதை G O வில் அறிவிப்பாக வெளியிடுமா அப்படி வெளியிட்டால் உண்மையிலேயே மோடிஜி கிரேட்
Rate this:
Share this comment
Cancel
Padmanaban Jayakrishnan - singapore,சிங்கப்பூர்
19-ஜூலை-201713:11:53 IST Report Abuse
Padmanaban Jayakrishnan இவ்ளோ நாளும் டோல்கேட் ல மணிக்கணக்கா காக்க வைத்து கொள்ளை அடிச்சிட்டு இன்றைக்கு யாரோ ஒருத்தர் RTI பைல் பண்ணதும் இப்படி ஒரு மொக்கை விதி இருப்பதை சொன்ன மத்திய அரசு இதை இத்தனை நாள் தெளிவாக சொல்லாதது ஏனோ? உண்மையில் 3 நிமிடம் எப்படி கணக்கிடப்படுகிறது என்பதை சொல்லததும் அதை இந்த ஊடகங்கள் கேட்காததும் ஏனோ?
Rate this:
Share this comment
Shake-sphere - India,இந்தியா
19-ஜூலை-201718:10:04 IST Report Abuse
 Shake-sphereபணம் செலுத்தும் இடத்திற்கு வந்து பணத்தை கவுண்டரில் கொடுத்த வினாடியில் இருந்து மூன்று நிமிடம் கணக்கிடப்படும்....
Rate this:
Share this comment
Cancel
kmish - trichy,இந்தியா
19-ஜூலை-201713:00:17 IST Report Abuse
kmish இந்த அறிவிப்பை ஒவ்வொரு டோல்கேட்டிலும் வைக்க ஆவண செய்ய வேண்டும் , மத்திய அரசு செய்யுமா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X