நீரின்றி அமையப்போகிறதா சென்னை?| Dinamalar

நீரின்றி அமையப்போகிறதா சென்னை?

Updated : ஜூலை 19, 2017 | Added : ஜூலை 19, 2017 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

நீரின்றி அமையப்போகிறதா சென்னை?

சென்னை மட்டுமே தமிழகம் இல்லை என்றாலும் வந்தாரை கையேந்தவிடாமல் வாழவைக்கும் தலைநகரமாக சென்னையே இருக்கிறது.
தமிழகம் முழுவதும் உள்ள மக்களின் ஏதோ ஒரு உறவோ நட்போ நிச்சயம் சென்னையில் இருப்பர் ஆகவே சென்னையைப் பற்றிய கவலையும் அக்கறையும் அவர்களுக்கு இருக்கத்தான் செய்யும்.

நுாறாண்டு வரலாற்றில் இல்லாத மழை பெய்து மக்கள் அவதிப்பட்ட அதே சென்னையில் தற்போது பதிமூன்று காலத்திற்கு முந்தைய வறட்சி நிலவுகிறது.சென்னையின் குடிநீர் ஆதாரமான புழல்,செம்பரம்பாக்கம்,சோழவாரம் மற்றும் பூண்டி ஆகிய ஏரிகள் பதிமூன்று ஆண்டுகளுக்கு பிறகு முழுமையாக வறண்டு காணப்படுகிறது.
பரந்து விரிந்த ஏரியில் இப்போது குட்டை போல ஆங்காங்கே தேங்கியிருக்கும் தண்ணீர் சேறும் சகதியும் கலந்த நிலையிலுள்ள தண்ணீராகும்.இந்த தண்ணீரும் அதிகம் போனால் இன்னும் நான்கு நாட்களுக்குதான் தாங்கும்.

வடகிழக்கு பருவ மழையும் பொய்த்துப் போய் ,ஆந்திரா கண்டேறு அணை தண்ணீரும் கைவிட்ட சூழ் நிலையில், சென்னையில் கூடும் மேகங்களும் கண்ணாமூச்சி காட்டிவந்தால் சென்னை மக்கள் குடிநீருக்கு என்ன செய்யப்போகிறார்கள்.
கிடைக்கும் தண்ணீரை வீணாக்கி கடலில் கலக்கவிடுவதில் கைதேர்ந்தவர்களான நம் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் எப்போது மழை நீரை முழுமையாக சேகரித்து பயன்படுத்துப் போகின்றனர்.

அரசியல் பேசி சீரியல் குறித்து விவாதித்து வெட்டியாக பொழுதை கழிப்பவர்களுக்கு கூட விக்கினால் குடிக்க தண்ணீர் வேண்டுமே இதை எண்ணி விவாதங்களும் பேச்சுக்களும் நீர் மேலாண்மை குறித்தல்லவா அமைய வேண்டும்.
அடுத்துவரும் தலைமுறை தண்ணீருக்கு என்ன செய்யப்போகிறது என்ற கவலை நீண்ட நாட்களாகவே உண்டு இப்போது கொஞ்ச நாட்களாக இந்த தலைமுறையே தண்ணீருக்கு என்ன செய்யப்போகிறது என்ற கவலை ஏற்ப்பட்டுவிட்டது.

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா
26-ஆக-201711:43:19 IST Report Abuse
Palanisamy T இந்தக் கேள்வியை ஐந்து முறை முதல்வராக ஆட்சிச் செய்தக் கருணாநிதியைப் பார்த்து மக்கள் கேட்க வேண்டும் அவர் என்னப் பதில்கள் சொல்லப் போகின்றார் மத்திய அரசு மீது மட்டும் பழிப் போடப் போகின்றாரார்?
Rate this:
Share this comment
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
15-ஆக-201711:39:02 IST Report Abuse
தமிழர்நீதி உடலுக்கு முடியாத ஜெயா சிறையிலிருந்து தப்பிக்க நேரம் காலம் செலவுசெய்து, போய் சேர்ந்துட்டார். அப்புறம் அவரு வளர்த்துவிட்ட கூனர்கள் பதவிப்போட்டி. இதுல தமிழ்நாட்டு நீரெல்லாம் கடலுக்கும் வீழலுக்கும் போய்விட்டது .
Rate this:
Share this comment
Cancel
Sha Shank Shankar - Chennai,இந்தியா
29-ஜூலை-201717:33:19 IST Report Abuse
Sha Shank Shankar ஊழல் ஊற்றெடுத்ததால் புழல் வறண்டுபோனது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X