வேகத்தடையால் தினமும் 9 பேர் பலி: கட்கரி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

வேகத்தடையால் தினமும் 9 பேர் பலி: கட்கரி

Added : ஜூலை 21, 2017 | கருத்துகள் (22)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
வேகத்தடை,Speed Brake,  கட்கரி, Gadkari,புதுடில்லி, New Delhi,மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, Union Minister Nitin Gadkari,லோக்சபா, Lok Sabha,சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர், Road Transport Minister, விபத்து, Accident,தேசிய நெடுஞ்சாலை, National Highway,  மத்திய அரசு , Central Government,

புதுடில்லி: சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடையால் தினமும் 9 பேர் பலியாவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி லோக்சபாவில் தெரிவித்தார்.
இதுகுறித்து சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி லோக்சபாவில் தெரிவித்ததாவது: முன்பிருந்ததைவிட தற்போது சாலை விபத்துக்கள் குறைந்துள்ளன. ஆனால் அதிகரித்து வரும் வாகனம் மற்றும் மக்கள் தொகை பெருக்கத்தால் சாலை விபத்துகள் ஏற்படுவதை தடுக்க இயலவில்லை.

சாலைகளில் அமைந்துள்ள வேகத்தடையால் ஏற்பட்ட விபத்து காரணமாக கடந்த 2015ம் ஆண்டில் 3,409 பேரும், 2014ம் ஆண்டில் 3,633 பேரும் பலியாகி உள்ளனர். வேகத்தடையால் சராசரியாக தினமும் 9 பேர் பலியாகின்றனர். விபத்தை தடுக்க, குறைந்தபட்சம் தேசிய நெடுஞ்சாலைகளில் வேகத்தடைகள் அமைக்க வேண்டாம் எனவும், அத்தியாவசிய இடங்களில் சிறிய அளவிலான வேகத்தடைகளை அமைக்கவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வேகத் தடையால் தினமும் 9 பேர் பலி: கட்கரி

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
guru - Trichy,இந்தியா
21-ஜூலை-201713:18:44 IST Report Abuse
guru திருச்சியில் உடனடியாக அமலுக்கு வந்தது
Rate this:
Share this comment
Pasupathi Subbian - trichi,இந்தியா
21-ஜூலை-201715:59:48 IST Report Abuse
Pasupathi Subbianஎங்கே என்று கூறுங்கள். ஒவ்வொரு சந்து பொந்தில் கூட ஒரு அடி உயரத்துக்கு ஒரு மேடு, ஏறி இறங்குவதற்குள் வண்டி தானாக அந்தப்பக்கமோ இந்தப்பக்கமோ திரும்பிக்கொள்கிறது. எதிர்வரும் வண்டிகள் மீது மோதாமல் வண்டியோட்டுவது பெரிய கலையாக வந்துவிடும்போல....
Rate this:
Share this comment
Cancel
தாமரை - பழநி,இந்தியா
21-ஜூலை-201712:48:33 IST Report Abuse
தாமரை வேகத் தடைகளையும் வேகத் தடுப்பு டிவைடர்களும் தான் நிறைய விபத்துக்களுக்கு காரணம். இந்தத் தடுப்புகளை வைத்துத்தான் ரோடுகளில் செல்லும் இரு சக்கர நான்கு சக்கர மற்றும் டூர் வண்டிகளிடம் நம்ம தமிழக போலீஸு லஞ்சமாக வாங்கி குவிக்கிறார்கள். இந்தியாவிலுள்ள பயங்கரவாதிகளுக்கெல்லாம் புகலிடமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. மத்திய புலனாய்வு அமைப்பினர் தான் இங்கு வந்து பல பயங்கர வாதிகளை பிடித்துச் சென்றுள்ளனர். நம்ம தமிழ்ப் போலீசுகள் ஷிப்ட் முறை வைத்து காசு பண்ணுவதற்கே நேரம் போதாமல் இருக்கின்றனர்.
Rate this:
Share this comment
Cancel
mukundan - chennai,இந்தியா
21-ஜூலை-201712:44:30 IST Report Abuse
mukundan சட்டத்தை பின்பற்றாத வேகத்தடை ஒரு பிரச்னை என்றால், எதிரே வரும் வண்டிகளின் high beam ஒளி விளக்குகளும் ஒரு காரணம். இப்பொழுது விதிகளுக்கு மாறாக extra LED விளக்குகளும் பொருத்தி எதிரே வரும் வாகனங்கள் ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கின்றனர். இதற்க்கு ஒரு தீர்வு கிட்டுமா? கடந்தகாலங்களில் கருப்பு மை அல்லது ஸ்டிக்கர் தடவி விடுவர் அதை திரும்பவும் கொண்டு வரலாமே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை