சென்னை புகைப்படத் தொழில்நுட்பக் கண்காட்சி ஒரு பார்வை.| Dinamalar

சென்னை புகைப்படத் தொழில்நுட்பக் கண்காட்சி ஒரு பார்வை.

Updated : ஜூலை 21, 2017 | Added : ஜூலை 21, 2017 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை புகைப்படத் தொழில்நுட்பக் கண்காட்சி ஒரு பார்வை.

சென்னை வர்தக மையத்தில் இமேஜ் 2017 என்ற தலைப்பில் புகைப்படம் மற்றும் வீடியோ தொடர்பான கண்காட்சி நடந்துவருகிறது.எந்த தொழிலையும் விட அவ்வப்போது அதிகம் புதுப்பித்துக்கொள்ளும் தொழில் புகைப்படம் மற்றும் வீடியோ என்பதினால் இப்போது என்ன புதிய விஷயம் வந்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ள நிறைய புகைப்பட மற்றும் வீடியோ கலைஞர்கள் திரண்டிருந்தனர்.

லட்ச ரூபாய்க்கு மேல் உள்ள கருவிகளை பொதுவாக கடைகளில் தொடவே விடமாட்டார்கள் விலை படிந்தால்தான் பேக்கிங்கை உடைப்பார்கள் ஆனால் அது போன்ற கருவிகளை இங்கு சர்வசாதாரணமாக அனைவரும் பயன்படுத்திப் பார்த்துக்கொள்ளவும் அனுமதிக்கின்றனர்.அது மட்டுமின்றி அந்த பொருட்களின் செயல்பாடுகள் எப்படிபட்டது என்பதை நிபுணர்கள் மூலம் விளக்கமும் தருகின்றனர்.ஒரு லட்சத்து எண்பாதாயிரம் ரூபாய் கொண்ட ஒரு ஸ்டூடியோ லைட்டின் செயல்பாடுகளை ஒரு மாடலைக்கொண்டு விளக்கினர் பிரமிப்பாக இருந்தது.
முன்பெல்லாம் கர்ப்பமாகிவிட்டால் போட்டோ எடுக்கக்கூடாது என்பார்கள் ஆனால் இப்போது முதல் மாத கர்ப்பம் முதல் நிறைமாத கர்ப்பம் வரை படம் எடுக்கின்றனர் என்பதை சொல்லும் விதத்தில் ஒரு ஸ்டாலில் படங்கள் வைத்திருந்தனர், குழந்தைகளை படம் எடுக்க தேவையான பொருட்களையும் விற்பனைக்கு வைத்திருந்தனர்.

எல்இடி திரைகளின் வளர்ச்சியும் துல்லியமும் அதன் தொழில்நுட்பமும் மிரட்டுகிறது.காட்டு வாழ்க்கைக்கான ஒரு படத்தை பார்த்தால் காட்டுக்குள் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
முன்பெல்லாம் படங்களுக்கான பிரேம் என்பது சதுரம் என்ற வடிவிலே இருந்தது இப்போது பலவித வடிவங்களில் வந்துவிட்டது என்பதை ஒரு அரங்கில் காணமுடிந்தது.ஆங்கில இதழ்களுக்கு நிகராக இன்னும் சொல்லப்போனால் அதற்கும் மேலாக தமிழில் வெளிவரும் பெஸ்ட் போட்டோகிராபி டூடே அரங்கில் பழைய தொழில்நுட்ப புத்தகங்களை நம்பமுடியாத குறைந்த விலைக்கு தருகின்றனர்.

கல்யாண வீடுகளுக்கு வருபவர்களை படம் எடுத்து தருவது என்பது இப்போது ஒரு பேஷனாகிவிட்டது அதற்கு ஒரு ஆள் போடாமல் ஒரு போட்டோ பூத் மெஷினை நிற்கவைத்துவிட்டால் போதும் அதுவே படம் எடுத்து உடனடியாக பிரிண்டும் போட்டுக் கொடுத்துவிடும்.இரண்டாவது நாளான்று (22/7/2017) சிறந்த புகைப்படக்கலைஞர்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெறுகிறது.மூன்றாவது நாளோடு கண்காட்சி நிறைவுபெறுகிறது.
-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.sivagurunathan - coimbatore,இந்தியா
22-ஜூலை-201720:21:49 IST Report Abuse
A.sivagurunathan நேரில் பார்த்த பரவசம் ஏற்படுத்துகிறது உங்கள் பக்குவமான எழுத்து. நன்றி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை