மனிதாபிமானத்துடன் இலவச மருத்துவம்!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மனிதாபிமானத்துடன் இலவச மருத்துவம்!

Updated : ஜூலை 23, 2017 | Added : ஜூலை 22, 2017 | கருத்துகள் (8)
Advertisement
இலவச மருத்துவம், Free medicine, மனிதாபிமானம்,humanitarian,  மருத்துவம், medicine ,சேவை துறை, service sector,டாக்டர் கமலி ஸ்ரீபால்,  doctor kamali sripal, சிகிச்சை, treatment,  பெண்கள்,women, தற்கொலை , suicide, மன நல ஆலோசனை, mental health counseling, தற்காப்பு கலை, martial arts,

மருத்துவம், சேவை துறை என்ற நிலையில் இருந்து மாறி, பணம் பண்ணும் தொழிலாக மாறி விட்டது என்ற கவலை அனைவருக்கும் உண்டு. அதே நேரம், மனிதாபிமானத்துடன், குறைந்த கட்டணம் பெற்று, ஆத்ம திருப்தியுடன், மருத்துவ சேவை ஆற்றுவோரும் உண்டு.

அவர்களுக்கு, சரியான உதாரணமாகவும், கட்டணமின்றி சிகிச்சை அளித்தும், சத்தமின்றி சேவையாற்றி வருகிறார், டாக்டர் கமலி ஸ்ரீபால்.மறைந்த, டி.ஜி.பி., ஸ்ரீபாலின் மனைவி, கமலி ஸ்ரீபால்.

எந்த பந்தாவும் இன்றி, தோற்றத்தில் எளிமையாகவும், நோயாளிகளிடம் கனிவாகவும் பழகுவதால், சிகிச்சைக்கு வருபவர்கள் கூட, அவர்களின் குடும்ப நண்பர்களாக மாறி விடுகின்றனர். இவரிடம், தினமும், சிகிச்சைக்கு வருவோர் ஏராளம். ஆனால், சிகிச்சைக்காக, ஒரு ரூபாய் கூட கட்டணம் வாங்குவதில்லை.

அன்பால், தங்கள் வீட்டு தோட்டங்களில் கிடைக்கும் பழம், காய்களை காணிக்கை போல் பலர் கொடுத்துச் செல்கின்றனர்.கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், குடிகாரர்களால் பாதிக்கப்படும் பெண்கள், தொடர் துயரத்தால் பாதிக்கப்படும் பெண்கள், தோல்வி, துரோகத்தால் பாதிக்கப்படும் குடும்பத்தினர், தற்கொலை முடிவெடுப்போர் என, விரக்தியில் உள்ளோருக்கு, மன நல ஆலோசனை மூலம் தீர்வு தருகிறார்.

வெறும் ஆலோசனை என்பதோடு, கண்ணுக்கு தெரியாத முக்கிய நபர்கள் மூலம், வெளியில் தெரியாமல் உதவியும் செய்து வருகிறார். சத்தமின்றி அவர் செய்யும் இந்த சேவையால், பிரச்னைகளை தொலைத்து, மீண்டும் சந்தோஷமாக வாழத் துவங்கியோர் பலர்.

கமலி ஸ்ரீபால், பெண்களின் பிரச்னைகளை ஆராய்ந்து, தீர்வு கூறுவது மட்டுமின்றி, அவர்களின் நடை, உடை, பாவனைகளை மாற்ற வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்குகிறார். பெண்கள், தற்காப்பு கலை கற்றிருப்பதும், ஆபத்து உதவி கருவிகள் வைத்திருப்பதும் கட்டாயம் எனவும் சொல்கிறார்.

அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள், போலீசார், கணவன், மனைவி, கல்லுாரி மாணவ, மாணவியர் என பலரும், கமலியிடம் ஆலோசனை பெற்று செல்கின்றனர்.கமலியின் இந்த செயலுக்கு, சித்தர்கள் மீதான ஆன்மிக சிந்தனைகள் தான் துணையாக உள்ளது என்கின்றனர், அவருக்கு நெருக்கமானவர்கள். இவரின் மருத்துவ, மன நல சிகிச்சையால் பயன் பெற்றோர், இவரின் சேவையை மனதார வாழ்த்துகின்றனர்.

இவரை போல பலரும், கட்டணமின்றி அல்லது குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்க முன் வந்தால், மருத்துவ துறை, உண்மையில் சேவைத் துறையாக மாறும்!

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா
23-ஜூலை-201713:00:02 IST Report Abuse
Syed Syed மனித நேயம் சமூக சேவை அதுவும் இலவசம் . அருமை. பாராட்டுகள். நல் வாழ்த்துக்கள். உங்களைப்போல் அனைவரும் ஒவ்வொரு துறையிலும் இதே போல் செயல் பட்டால் நாட்டின் வளர்ச்சி இதுதான்..
Rate this:
Share this comment
Cancel
OUTSPOKEN - CHENNAI,இந்தியா
23-ஜூலை-201712:53:23 IST Report Abuse
OUTSPOKEN Where is this hospital? Next time please write the details so that we can pass the information to needy
Rate this:
Share this comment
Cancel
S.L.Narasimman - Madurai,இந்தியா
23-ஜூலை-201711:08:04 IST Report Abuse
S.L.Narasimman இவர் மாதிரி சமுதாய சிந்தனை, இரக்க சுபாவம் தன்னலமற்ற தொண்டு உள்ளம் உள்ளவர்கள் அரசின் தலைமை ஏற்கணும். வாழ்த்துக்கள் உங்கள் தொண்டுள்ளதிற்கு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை