சொத்து குவிப்பு: நேருவுக்கு சிக்கல் Dinamalar
பதிவு செய்த நாள் :
சொத்து குவிப்பு: நேருவுக்கு சிக்கல்
சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடில்லி:சொத்துக் குவிப்பு வழக்கில், தி.மு.க.,வின், முன்னாள் தமிழக அமைச்சர், நேரு மற்றும் அவர் மனைவியை விடுவித்து, சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை, சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ளது.

சொத்து குவிப்பு,நேருவுக்கு,சிக்கல்,சுப்ரீம்கோர்ட்,உத்தரவு

தமிழகத்தில், 2006 - 2011ல், தி.மு.க., ஆட்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தவர், நேரு; தற்போது, திருச்சி மேற்கு சட்டசபைத் தொகுதி, எம்.எல்.ஏ.,வாக உள்ளார்.

அதிகரிப்பு


இவர், அமைச்சராக பதவி வகித்தபோது, தன் பெயரிலும், மனைவி சாந்தா, மகன் அருண் பெயரிலும் வருவாய்க்கு அதிகமாக சொத்துக் களை வாங்கி குவித்ததாக, 2011ல் வழக்கு தொடரப்பட்டது.கடந்த, 2006ல், இவர்கள் பெய ரில், 2.83 கோடி ரூபாயாக இருந்த சொத்து மதிப்பு, 2011ல், 18.52 கோடி ரூபாயாக அதிகரித் ததாக, முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப் பட்டிருந்தது.

இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

செய்யப்பட்ட பின், தங்களை விடுவிக்கும்படி, கீழ் கோர்ட்டில், நேரு உள்ளிட்ட மூவரும் மனு தாக்கல் செய்தனர். ஆனால், வழக்கிலிருந்து, நேரு, சாந்தாவை விடுவிக்காத கீழ் கோர்ட், அருணின் சொத்துக்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து, சென்னை ஐகோர்ட்டில், மூவரும் மேல்முறையீடு செய்தனர். அவர்களின் மனுக்களை விசாரித்த ஐகோர்ட், நேருவையும், அவர் மனைவியையும், வழக்கில் இருந்து விடுவித் தது; இருப்பினும், மகன் அருணின் சொத்து, வரு வாய் குறித்து மேல் விசாரணை நடத்த வேண்டும் என, ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேல் முறையீடு


நேருவையும், அவர் மனைவி சாந்தாவையும், வழக்கில் இருந்து விடுவித்ததை எதிர்த்து,சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கில், நேரு சார்பில் ஆஜரான வழக்கறி ஞர், நேருவுக்கு, அவர் மகன் அருண் மூலமாக வரு வாய் கிடைத்ததாகவும், அருண் தனக்கு கிடைக்கும் வருவாய்க்கு, டி.டி.எஸ்., எனப்படும் முறையில், வருவாய் கிடைக்கும்போதே வரி செலுத்தி விட்ட தாகவும், அதனால், வருவாய்க்கு மீறிய சொத்து சேர்த்ததாக கூற முடியாது என்றும் வாதிட்டார்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்க றிஞர், முகுல் ரோஹத்கி, 'ஆரம்ப நிலையி லேயே, நேருவும், அவர் மனைவியும், வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். 'அவர்கள் மீதான குற்றச் சாட்டுகள் தீர விசாரிக்கப்பட வேண்டி உள்ளது. அருண் மீதான சொத்து குவிப்பு குற்றச்சாட்டையும்

Advertisement

விசாரிக்க வேண்டும்' என்றார். வழக்கை விசாரித்த, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, அமிதவா ராய் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:

வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்த வழக் கில், நேரு, அவர் மனைவி சாந்தா ஆகியோரை விடுவித்து, ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அருண் மீதான குற்றச்சாட்டு களை விசாரிக்க வேண்டும் என்ற, கீழ் கோர்ட்டின் உத்தரவு உறுதி செய்யப் படுகிறது.

விசாரணை


நேரு, அவர் மனைவி, மகன் மீதான குற்றச் சாட்டுகள் குறித்த விசாரணையை, புலனாய்வு துறை விரைவில் முடிக்க வேண்டும். அதைத் தொடர்ந்து, இவர்கள் மீதான வழக்கு விசார ணையை, கீழ் கோர்ட் தொடர வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A shanmugam - VELLORE,இந்தியா
28-ஜூலை-201716:24:23 IST Report Abuse

A shanmugamஇனி இந்தியாவில் அரசியல்வாதிகள் ஊழலுக்கு தனியாக ஒரு கோர்ட்டை அமைத்துவிடலாம். அதே போல், கொலை கேஸேகளுக்கு தனி கோர்ட்டும், சிவில் கேஸேகளுக்கு தனி கோர்ட் என்று அமைத்தால், நிலுவையில் இருக்கும் கேஸேகளை காலதாமதஇண்டிரி கூடிய விரைவில் பைசல் செய்துவிடலாம்.

Rate this:
Balaji - Khaithan,குவைத்
24-ஜூலை-201718:16:14 IST Report Abuse

Balajiஇதுபோன்று வழக்குகளில் விடுபடுவதற்காகத் தானே முன்னாள் பிரதாமரையே மிரட்டி தங்களுக்கு வேண்டியவர்களை நீதிபதிகளாக நியமனம் செய்ய முற்சித்தார்கள்....... எத்தனை புல்லுருவி இவர்களின் வற்புறுத்தலுக்கு இசைந்து நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனரோ யாருக்கு தெரியும்....... இன்னுமொரு உத்தமர் வழக்கு வரும்போதெல்லாம் ஆஜராவதே இல்லை....... 3 ஹியரின் முடிந்த பிறகு அடுத்ததில் வரவில்லையானால் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்க பட்டுவிடுமென்று நான்காவது முறை ஆஜராகி மீண்டும் வாய்தா வாங்கியே காலத்தை ஓட்டிக்கொண்டு இருக்கிறார்...... இந்த லட்சணத்தில் இவர்கள் தான் ஜெ 18 வருடம் வழக்கை இழுத்தடித்தார் என்று கூக்குரல் விடுகிறார்கள்......... எப்போது தமிழகத்தில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் வாக்கு சதம் ஒற்றை இலக்கத்தில் வருகிறதோ அப்போது தான் தமிழகம் முன்னேற்றமடைய வாய்ப்புகள் வரும்..............

Rate this:
Prabaharan - nagercoil,இந்தியா
24-ஜூலை-201715:40:14 IST Report Abuse

Prabaharanஅரசியல்வியாதிகளின் சொத்துக்கள் பற்றிய விவரங்களை விசாரிக்க கூடாது என ஒரு சட்டம் கொண்டு வரலாமா?

Rate this:
24-ஜூலை-201714:55:45 IST Report Abuse

அப்பாவிஐயோ...வெறும் 10 , 15 கோடிக்கெல்லாம் வழக்கு விசாரணையா? கட்டுமர ஆட்சியில், 175000 கோடி அடிச்சாங்களே... ஆ.ராசாவின் துணையுடன்... அதை எப்ப தோண்டப் போறீங்க?

Rate this:
Manian - Chennai,இந்தியா
27-ஜூலை-201700:07:17 IST Report Abuse

Manianகளை எடுக்கும்போது மொதல்லே சுலபமா புடுங்குறதை எடுக்கணும். கடைசிலேதான் முத்தின களையை வேரோடு வெந்நீர் விட்டு புடுங்கணும். கொஞ்சம் நாளாகும்....

Rate this:
Veeraraghavan Jagannathan - Tiruchirappalli,இந்தியா
24-ஜூலை-201714:53:40 IST Report Abuse

Veeraraghavan Jagannathanஎப்பொழுதோ கேள்விப்பட்டது. நேரு கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்த போது கருணாநிதி கேட்டாராம்." திருச்சில மலைக்கோட்டையைத் தவிர எல்லாத்தையும் வளைச்சுட்டியாமே?". அதற்கு நேரு "அண்ணே, நான் உங்கள் உடன் பிறப்பாச்சே..நீங்க சென்னையில பரங்கி மலய மட்டும் விட்டு வச்சு இருக்கீங்களா அதே மாதிரி தான் என்றாராம். மொத்தத்தில் மலய முழுங்காத மகா தேவர்கள்

Rate this:
Baskar - Paris,பிரான்ஸ்
24-ஜூலை-201714:46:45 IST Report Abuse

Baskarஎங்கும் ஊழல் எதிலும் ஊழல் கருணாநிதியின் கட்சிக்கு. உடனே மறுப்பார் சுடாலின். இப்போது இந்த வழக்கை விரைந்து முடித்து தீர்ப்பு சொல்ல வேண்டும். விரைவில் கனி சிறைக்கு செல்வார் பின்னாடியே இவர்களும் அதற்க்கு பின்னாடி மாறன் சகோதரர்களும் செல்வார்கள்.

Rate this:
John Shiva U.K - London,யுனைடெட் கிங்டம்
24-ஜூலை-201713:56:14 IST Report Abuse

John Shiva   U.Kதி மு க செய்த ஊழல் சொல்லில் அடங்கா.கருணாநிதி தொட்டு தொண்டர் வரை செய்த ஊழல் தமிழகத்து வந்த கேடு .இதை பற்றி ஸ்டாலின் பேச மாட்டார் .இப்பவும் ஊழல்வாதிகள் கட்சியை நடத்துகிறார்கள்

Rate this:
எம்.ஆர்.பி.குமார் - CHENNAI,இந்தியா
24-ஜூலை-201712:00:24 IST Report Abuse

எம்.ஆர்.பி.குமார் இப்போ தி.மு.க ரவுண்டு.. அப்புறம் 2 ஜி, 3 ஜி, AIRCEL கேஸ்ன்னு நிறைய இருக்கு. தி.மு.க-ல ஊழலுக்கும், கேசுக்குமா பஞ்சம்.

Rate this:
Ramesh Rayen - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
24-ஜூலை-201710:58:00 IST Report Abuse

Ramesh Rayenஆண்டவன் நின்று கொல்வான்

Rate this:
Manian - Chennai,இந்தியா
27-ஜூலை-201700:09:18 IST Report Abuse

Manianஅவன் கர்ம வினையே கொல்லும். மறதி நோய் ஆரம்பமே....

Rate this:
sachin - madurai,இந்தியா
24-ஜூலை-201710:38:53 IST Report Abuse

sachinஎப்படியும் ஒரு 18 வருடம் வழக்கு நடக்கும் ...கிரிமினல் ஜெயா வழக்கு போல .. அப்புறம் உங்களுக்கு தெரியும் என்ன நடக்கும் என்று ...போங்க பா

Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement