'சீனாவிடம் இருந்து தப்பிக்க மந்திர ஜபம் செய்யுங்க' | 'சீனாவிடம் இருந்து தப்பிக்க மந்திர ஜபம் செய்யுங்க'| Dinamalar

பொது செய்தி

இந்தியா

'சீனாவிடம் இருந்து தப்பிக்க மந்திர ஜபம் செய்யுங்க'

Added : ஜூலை 24, 2017 | கருத்துகள் (96)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
சீனா,  China,  ஜபம், Japa, புதுடில்லி, New Delhi, ஆர்.எஸ்.எஸ்., RSS, சிக்கிம் எல்லை,  Sikkim border, டோகோலாம், Tokolam ,போர் , War, இந்தரேஷ் குமார், Indresh Kumar, கைலாஷ், Kailash, ஹிமாலயா, Himalaya, திபெத் ,  Tibet,விடுதலை , Liberation, பூஜை ,Puja, சீன ராட்சசன்,Chinese Rakshasa

புதுடில்லி: சீனாவின் ஆக்கிரமிப்பில் இருந்து தப்பிக்க, ஆர்.எஸ்.எஸ்., மூத்த நிர்வாகி, புது யோசனை கூறியுள்ளார்.

நம் நாட்டின் வடகிழக்கு மாநிலமான, சிக்கிம் எல்லையில் உள்ள டோகோலாம் பகுதியை ஆக்கிரமிக்க, சீனா முயற்சிக்கிறது. இதனால், அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. அங்கு, போர் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், சீனாவின் ஆதிக்கத்தை குறைக்க, ஆர்.எஸ்.எஸ்., தேசிய செயற்குழு உறுப்பினரான, இந்தரேஷ் குமார் கூறியுள்ளதாவது:

சீனாவுக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டுமானால், ஒவ்வொரு வீட்டிலும், சீன தயாரிப்பு பொருட்களை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்; இது, சீனாவின் பொருளாதாரத்துக்கு மிகப் பெரிய அடியாக அமையும்.

'கைலாஷ், ஹிமாலயா, திபெத் ஆகிய பகுதிகளுக்கு, சீன ராட்சசனின் பிடியில் இருந்து விடுதலை வேண்டும்' என, தினமும் காலையில் பூஜை செய்யும்போது, ஐந்து முறை கூற வேண்டும். ஹிந்துக்கள் மட்டுமல்ல அனைத்து மதத்தினரும், இந்த மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (96)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
24-ஜூலை-201716:43:43 IST Report Abuse
Endrum Indian வேடிக்கை வினோதம் சீன பொருட்களை வாங்காதீர்கள் என்று எல்லோரும் சொல்கின்றார்கள்? ஏன். அதை இறக்குமதி செய்தது யார் அரசாங்கமா??? தனியார்களா? அப்படி தனியார்கள் இறக்குமதி செய்தால் அரசாங்கத்திற்கு வரி கட்டாமல் செய்ய முடியுமா? சீன பொருட்கள் கடத்தல் முறையில் இந்தியாவில் மறை முகமாக நுழைகின்றதா? அப்படி இருக்கும் போது மிகச்சரியான தீர்வு அரசாங்கமே சீன பொருட்கள் இறக்குமதிக்கு பூரண தடை விதித்தால் போதுமானது??? அதை உடனே செய்யுமா இந்த காங்கிரஸ் போல மாறி வரும் பி.ஜெ.பி அரசு. அதை செய்தால் போதும் சீனாக்காரன் வாலை சுருட்டிகொண்டு நம் வழிக்கு வந்து இடைஞ்சல் செய்வதை உடனே நிறுத்தி விடுவான்.
Rate this:
Share this comment
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
25-ஜூலை-201700:34:33 IST Report Abuse
Panneerselvam Chinnasamyரொம்ப சரி......
Rate this:
Share this comment
Cancel
Tamilan - Chennai,இந்தியா
24-ஜூலை-201716:30:06 IST Report Abuse
Tamilan யாராவது ஒரு கட்சி தலைவர் அல்லது ஒரு நடிகர் உடல் நலம் சரி இல்லாமல் கவலைக்கிடமாக இருக்கிறார் என்றால் எல்லா மதத்தினரும் இனத்தவரும் கூட்டு பிரார்த்தனை செய்ய சொன்னால் செய்யும் மக்கள் அதுவும் முக்கியமாக நம் தமிழ் மக்கள் நாட்டு நலனுக்காக அதை செய்ய சொன்னால் இப்படி துப்பு துப்பு என்று துப்பினால் தமிழர்களுக்கு தேச பக்தி இல்லை என்று நினைக்க மாட்டார்களா. நம் நாடு நன்றாக இருக்க வேண்டும் என்று அவரவர் தங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று எந்த மனம் எப்படி நினைக்கிறதோ அதே போல நம் தேசம் நன்றாக இருக்க எவை தேவை என்பதை அவர் கூறி இருக்கிறார். அதை நாம் அனைவரும் விரும்பினால் அது நடக்கும் என்று அவர் நம் மீது அளவு கடந்த நம்பிக்கை கொண்டு அவ்வாறு ஆர்வ கோளாறு மிகுதியால் கூறி விட்டார் என்னமோ அவர் நாராயண நாமத்தை சொல்ல சொன்னது போல புலம்பி தீர்க்கிறீர்களே.
Rate this:
Share this comment
Cancel
Tamilan - Chennai,இந்தியா
24-ஜூலை-201716:06:15 IST Report Abuse
Tamilan இவர் சொல்லுவதும் சரி தான் நல்ல யோசனையும் கூட. அதே போல மோடி மக்களை வதைக்காமல் இருக்க வேண்டும் என்றும் வேண்டி கொள்ளலாம். அந்நிய முதலீடு மட்டுமே குறிக்கோளாக இல்லாமல் நம் தேச மக்கள் வளர வேண்டியதை செய்ய வேண்டும் என்று மக்கள் அனைவரும் உறங்க போகும் முன் வேண்டிக் கொள்ளலாம்.
Rate this:
Share this comment
Cancel
V Gopalan - Bangalore ,இந்தியா
24-ஜூலை-201715:36:41 IST Report Abuse
V Gopalan First of all, let him advice Govt of India to ban import of Chinese products. It's similar to granting licence for manufacturing Polythene bags but advicing the general public not to use the carry bags and directing the shop keepers not to use carry bags.
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
24-ஜூலை-201716:49:02 IST Report Abuse
Agni ShivaMay you please say under what International rules the Indian government can ban Chinese products since India is also a signatory in the WTO treaty? Indians can boycott chinese products totally that is the only option available now. India cant ban Chinese products outrightly now as China is not under UNO banned countries list of trade embargo....
Rate this:
Share this comment
Cancel
24-ஜூலை-201715:01:59 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் செய்தியை முழுவதுமாக படிக்காமல் பலர் இங்கே உளறி கொட்டியிருக்கிறார்கள். அவர் சொன்னது நம் இலட்சியத்தை தினமும் 5 முறை சொல்லி மனதில் பதியவைத்துக்கொள்ளவேண்டும் என்பதே. தெரியாமலும் நம் எதிரியின் பொருளை உபயோகிப்பது , உதவுவதோ கூடாது என்பதற்காக தான். அவர் ஒன்றும் ஜெய் பஜ்ரங் பலி என்று மந்திரம் சொல்ல சொல்லவில்லை.
Rate this:
Share this comment
Cancel
Snake Babu - Salem,இந்தியா
24-ஜூலை-201714:48:34 IST Report Abuse
Snake Babu அரசியலை தவிர்த்து சிலவிஷயங்களை பகிர்ந்துகொள்ளலாம் என்று....... அரசியல் எனும் போது இது ஒரு பெரிய காமடி........ இதற்கென்று ராணுவம் இருக்கிறது, மத்திய அரசு இருக்கிறது அவர்கள் பார்த்துக்கொள்ளட்டும். அதில் அதிகப்பிரசங்கித்தனமாக தலையீடுவது தவறு.
Rate this:
Share this comment
Cancel
Siva - Chennai,இந்தியா
24-ஜூலை-201713:54:04 IST Report Abuse
Siva அவர் என்ன பேசினார் என்று முழுமையாக தெரிந்துகொள்ளாமல் விமர்சிப்பது தவறு. ஒருவர் முப்பது நிமிடம் பேசினால் முப்பது நொடி பேசியது மட்டுமே வைத்து நாம் எதையும் சொல்லக்கூடாது. 1991 ல் உலக வர்த்தக ஒப்பந்தம் போட்டாகிவிட்டது, ஆகவே அரசாங்கம் சீன பொருட்களை தடை செய்ய முடியாது, (போர் நடந்தாலொழிய). மக்கள் தான் முடிவு செய்யவேண்டும். (1991 ல் ஒப்பந்தம் போட்டிருக்காவிட்டால், நாடு திவாலாகி இருக்கும். வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடி, உள்நாட்டு குழப்பம் ஏற்பட்டிருக்கும்.) எவ்வளவோ ஆண்டுகளாக உலக நன்மை வேண்டி அனைத்து வழிப்பாடுதலங்களிலும் (கோவில், மசூதி, சர்ச், குருதவாரா) கூட்டு பிரார்த்தனை நடைபெற்று வருகிறது. (உலகம் அமைதியாக உள்ளதா என்று கேட்காதீர்கள். அது அவரவர் நம்பிக்கை) எனவே இவர் பிரார்த்தனை செய்யுங்கள் என்று சொல்லியதில் என்ன தவறு?
Rate this:
Share this comment
Cancel
Prabaharan - nagercoil,இந்தியா
24-ஜூலை-201713:52:35 IST Report Abuse
Prabaharan யாகங்கள் செய்யலாம், மண்சோறு சாப்பிடலாம் , அலகு குத்தலாம், காவடி எடுக்கலாம், யோகா செய்யலாம் என சொல்லிக்கொண்டு போகலாம். ஆள் தேவை என்றால் அனுபவமுள்ள தமிழ்நாட்டுக்காரர்கள் இருக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
24-ஜூலை-201713:41:52 IST Report Abuse
pradeesh parthasarathy இதற்கு பெயர் தான் மேக் இன் இந்தியாவோ ....
Rate this:
Share this comment
Cancel
பீ ஜெ பீ நேசன். - chennai,இந்தியா
24-ஜூலை-201713:31:29 IST Report Abuse
பீ ஜெ பீ நேசன். அப்படியே பிஜேபி இடமிருந்து தப்பிக்க ஏதாவது மந்திரம் இருந்தால் சொல்லுங்களேன்....
Rate this:
Share this comment
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
24-ஜூலை-201716:50:02 IST Report Abuse
Agni Shivaஇருக்கிறது.. மூர்க்கம் வாழ்க.. மூர்க்கம் வாழ்க.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை