Now, armed security guards in Indore protect tomatoes as price soars | தக்காளி உள்ளிட்ட காய்கறிகளுக்கு ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு| Dinamalar

தக்காளி உள்ளிட்ட காய்கறிகளுக்கு ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு

Updated : ஜூலை 24, 2017 | Added : ஜூலை 24, 2017 | கருத்துகள் (46)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
இந்தூர், Inthur, தக்காளி,  tomato, விலைவாசி உயர்வு, price rise, பாதுகாப்பு, security, ஆயுதம், weapon,மும்பை,Mumbai,  கடத்தல், kidnapping, இந்தூர் மார்க்கெட், inthur market, உணவுப்பொருட்கள்,  food, மும்பை மார்க்கெட், Mumbai market,

இந்தூர் : இந்தூர் மார்க்கெட்டில், தக்காளி பாதுகாப்பிற்காக, ஆயுதம் தாங்கிய வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தக்காளி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை சமீபகாலமாக கணிசமான அளவு அதிகரித்து வருகிறது. இதில், தக்காளியின் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. தக்காளி தற்போது கிலோ ரூ. 100 வரை விற்கப்பட்டு வருகிறது. இதனால், பலதரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே கடந்த 20ம் தேதி, இந்தூர் மார்க்கெட்டில் 300 கிலோ தக்காளி மர்மநபர்களால் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, ஒவ்வொரு தக்காளி வேனிற்கும், 5க்கும் மேற்பட்ட ஆயுதம் ஏந்திய வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தக்காளிக்கு ஆயுதம் ஏந்திய வீரர்கள் பாதுகாப்பு

இதேபோல், கடந்த 15ம் தேதி, மும்பை மார்க்கெட்டில் 2,600 கிலோ தக்காளி இருந்த டிரக்கை மர்மநபர்கள் கடத்திச்சென்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A shanmugam - VELLORE,இந்தியா
24-ஜூலை-201716:14:06 IST Report Abuse
A shanmugam நாட்லே எதுஎதுக்குத்தான் துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர் பாதுகாப்புக்கு போடுவது என்ற விவஸ்தையே இல்லாமல் போய்ச்சு?
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
24-ஜூலை-201714:22:32 IST Report Abuse
ஜெயந்தன் அடுத்த சோமாலியா இந்தியாவாகத்தான் இருக்கும்......
Rate this:
Share this comment
Cancel
CHANDRA GUPTHAN - doha,கத்தார்
24-ஜூலை-201713:11:27 IST Report Abuse
CHANDRA GUPTHAN இன்னும் கொஞ்ச நாளில் கிலோ தக்காளி 50 பைசாவுக்கு விக்குமே அப்போது இதே மாதிரி கூவுவீங்களா? தக்காளி பறிக்க ஆகும் செலவுக்கு கூட விலை கிடைக்காம இதே விவசாயிகள் வயலிலே உழுத காலங்கள் உண்டு. இதுக்கும் மோடிக்கும் என்ன சம்பந்தம். விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்திட்டா நாளைக்கே தக்காளி 10 பைசாவுக்கு வந்துடுமா? இவ்வளவு வருஷம் ஆண்டவர்கள் விவசாயிகளை மதியோ மதின்னு மதிச்சு விவசாயிகள் அமோகமா இருக்கிறாற்போல .
Rate this:
Share this comment
Cancel
Rajan. - singapore,சிங்கப்பூர்
24-ஜூலை-201713:05:53 IST Report Abuse
Rajan. இது ஆரம்பம் தான் , இனிமேலும் , உணவு பொருள் அனைத்துக்கும் காவல் போடவேண்டிவரும் , விவசாயத்தை அழித்ததால், பலன்
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
24-ஜூலை-201712:45:02 IST Report Abuse
Pasupathi Subbian அடுத்த சில நாட்களில் இவர்களுக்கு வேற காய்கறிக்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டிய அவசியம் வரும். நிரந்தரமாக காய்கறி படை என்று ஒன்று நிறுவவேண்டும். வி ஐ பி களுக்கு பாதுகாப்பு கொடுப்பது போல , காய்கறிகளும் நிரந்தர படைகள் அமைக்கப்படுமா ?
Rate this:
Share this comment
Cancel
Mano - Madurai,இந்தியா
24-ஜூலை-201712:21:00 IST Report Abuse
Mano நாட்டில் பெண்கள் மானபங்கம், கற்பழிப்பு, கொலை, கொள்ளை எதனையும் தடுக்க திராணி இல்லாத கேவலமான இந்த பிஜேபி, மாட்டுக்கும் தக்காளிக்கும் போலீஸ் பாதுகாப்பு கொடுப்பது மிகவும் கேவலமா இருக்குது. நாட்டின் பாதுகாப்புக்கு பத்து நாட்களுக்குத்தான் ஆயுதங்கள் உள்ளது. அதை எல்லாம் சீர் செய்யாமல் முட்டாள் தனமான காரியங்களை செய்கின்றனர்
Rate this:
Share this comment
Cancel
எம்.ஆர்.பி.குமார் - CHENNAI,இந்தியா
24-ஜூலை-201711:42:44 IST Report Abuse
எம்.ஆர்.பி.குமார் Z பிரிவா..?.. மத்திய அரசு இதை கவனத்தில் கொள்ளுமா. ஏற்கனவே வெங்காயத்தில் வீழ்த்த அரசு..இதோட நிப்பாட்டுங்க .. அப்புறம் பீன்ஸ் , கொத்தவரங்கா, கேரட் , பீட்ரூட் ன்னு போகப்போகுது..
Rate this:
Share this comment
Cancel
MURUGAN - Mumbai  ( Posted via: Dinamalar Windows App )
24-ஜூலை-201710:08:41 IST Report Abuse
MURUGAN விவசாயிகள் போராட்டத்தைப் பற்றி கேள்வி கேட்டபொழுது தமிழக முதல்வர் அது அவர்களின் சொந்த விருப்பம் என்று கூறினார் இதே போன்று விவசாயிகள் தற்கொலையைப் பற்றி கேள்வி கேட்டால் அவரும் இதே பதிலைத்தான் கூறியிருப்பார்
Rate this:
Share this comment
Cancel
MURUGAN - Mumbai  ( Posted via: Dinamalar Windows App )
24-ஜூலை-201710:05:20 IST Report Abuse
MURUGAN இந்த ஆட்சியில் நாடு பின்தங்கிய நாடுகள் பட்டியலில் சேர்ந்தது மட்டும் தான் சாதனை
Rate this:
Share this comment
Cancel
MURUGAN - Mumbai  ( Posted via: Dinamalar Windows App )
24-ஜூலை-201710:03:27 IST Report Abuse
MURUGAN ஒரு பக்கம் முடிவில்லா இணையச் சேவை மறுபக்கம் உயிர் வாழத் தேவையான உணவுப்பொருட்கள் விலை உயர்வு விவசாயிகள் சாவு அழிந்து வரும் விவசாயம் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தன் ஊர் சுற்றுவதிலேயே கவனமாக செயலபடும் பிரதம மந்திரி நல்ல நாடு நல்ல ஆட்சி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை