பாஸ்போர்ட் பெற இனி பிறப்பு சான்றிதழ் அவசியமில்லை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பாஸ்போர்ட் பெற இனி பிறப்பு சான்றிதழ் அவசியமில்லை

Added : ஜூலை 24, 2017 | கருத்துகள் (22)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பாஸ்போர்ட், பிறப்பு சான்றிதழ், மத்திய அரசு, ஆதார்

புதுடில்லி: கடந்த வாரம் பார்லி.,யில் பாஸ்போர்ட் விண்ணப்ப முறை தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய அரசு, பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறை எளிமையாக்கப்பட உள்ளது என பதிலளித்துள்ளது.
மத்திய அமைச்சர் வி.கே.சிங் அளித்துள்ள பதிலில், பாஸ்போர்ட் பெறுவதற்கு இனி பிறப்பு சான்றிதழ் அவசியமில்லை. ஆதார் அல்லது பான் கார்டை சமர்ப்பித்தாலே போதும். அதுவே பிறப்பு சான்றிதழாக எடுத்துக் கொள்ளப்படும். தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள், அவர்களை பராமரித்த காப்பகத்திடம் இருந்து பிறந்த தேதி தொடர்பான ஆவணத்தை பெற்று அளிக்கலாம்.
புதிய பாஸ்போர்டில் தனிநபர் விபரங்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் அச்சிடப்பட்டிருக்கும். 60 வயதிற்கு மேல் மற்றும் 8 வயதிற்கு கீழுள்ள அனைத்து பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கும் பாஸ்போர்ட் கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் சலுகை அளிக்கப்படும். ஆன் லைனில் விண்ணப்பம் செய்வோர் பெற்றோரில் தந்தை அல்லது தாய் யாராவது ஒருவரின் பெயரை மட்டும் குறிப்பிட்டால் போதும்.

பாஸ்போர்ட்.,க்கு பிறப்பு சான்றிதழ் அவசியமில்லை

இணைப்பு படிவத்தின் எண்ணிக்கையும் 15 லிருந்த 9 ஆக குறைக்கப்பட உள்ளது. அது சுய ஒப்பம் இருந்தாலே போதுமானது. ஒப்புகை கையெழுத்து பெற வேண்டிய அவசியமில்லை. திருமணம் ஆனோர் திருமண சான்றிதழ் சமர்ப்பிக்கவோ, அவர்கள் விவாகரத்து பெற்றிருந்தால் அவர்களின் கணவர் அல்லது மனைவியின் பெயரையோ குறிப்பிடவோ தேவையில்லை என தெரிவித்துள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnas - NJ,யூ.எஸ்.ஏ
24-ஜூலை-201713:59:16 IST Report Abuse
Krishnas கோமாளிகள் ஆட்சியில் துணிவு இருந்தால் பாஸ்போர்ட்டை இந்தியில் மட்டும் வழங்க வேண்டியதுதானே ஒருத்தன் இந்தியாவை விட்டு வெளியில் செல்ல முடியாது. பாரத மாதாகீ ஜே என்று சொல்லிக்கொண்டு இங்கேயே இருக்க வேண்டியதுதான்.
Rate this:
Share this comment
Cancel
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
24-ஜூலை-201713:15:57 IST Report Abuse
தங்கை ராஜா ஆதார் கார்டுக்குள் எல்லா விபரங்களும் வந்து விடுவதால் இது போதும். சில வருடங்களுக்கு முன் வரை பாஸ்போர்ட் அலுவலர்கள் படுத்திய பாடிருக்கிறதே.. சுத்த காட்டுமிராண்டித்தனம். மோடி ஆட்சியில் இதுவொரு நல்ல முன்னேற்றம்.
Rate this:
Share this comment
Cancel
24-ஜூலை-201713:15:25 IST Report Abuse
சுவாமி சுப்ரஜனாந்தா அப்படியே பாஸ் போர்டை இலவசமாக வழங்கி விடலாம்.மோடியின் அரசு அடுத்த முறையும் வரட்டும். ஏதேனும் ஒரு நாட்டுக்கு இலவச சுற்றுலா சென்று வர டிக்கெட்டும் செலவுக்கு துட்டும் கொடுத்தால் நல்லது.
Rate this:
Share this comment
Cancel
Karuthukirukkan - Chennai,இந்தியா
24-ஜூலை-201712:30:09 IST Report Abuse
Karuthukirukkan What is the use of Hindi in Indian passport? Who is going to understand it outside India? If it is just for namesake nationalism, why not our own language Tamil?
Rate this:
Share this comment
Harinathan Krishnanandam - Chennai,இந்தியா
24-ஜூலை-201714:19:44 IST Report Abuse
Harinathan Krishnanandamபாஸ்ப்போர்ட்ல ஹிந்தி ஒரு கொள்கை முடிவு விமான நிலையங்களில் ஆங்கிலம் தெரியாத சுங்க துறை மற்றும் காவல்துறையினர் ஹிந்தி விவரங்களை படித்து தெரிந்து கொள்ள உதவும்...
Rate this:
Share this comment
Karuthukirukkan - Chennai,இந்தியா
24-ஜூலை-201715:19:43 IST Report Abuse
Karuthukirukkanஎப்ப ஹரிநாதா செம விளக்கம் .. மோடியே இந்த விளக்கத்தை கேட்டு வியப்பார் .....
Rate this:
Share this comment
yaaro - chennai,இந்தியா
24-ஜூலை-201718:53:05 IST Report Abuse
yaaroமத்த நாட்டுக்காரன் எல்லாம் இப்படித்தான் இங்கிலிஷ்ல மட்டும் தான் அவனோட பாஸ்போர்ட் விடறானா ? அவனவன் அவனவன் நாட்டு மொழியிலயும் கூடவே ஆங்கிலத்திலயும் விடறான் . சொம்மா ஏதானும் கூவிட்டு ..இருக்கிற எல்லா மொழியிலயும் அடிச்சு விட்டா பாஸ்போர்ட் yellowbook சைஸுக்கு வந்திரும் . ஏற்கனவே பாஸ்ப்போர்ட்டில் "name / நாம் (ஹிந்தியில் )" என உள்ளது . இப்போ அந்த பெயரையும் இந்தியில் அடிக்கிறார்கள் . ஆங்கிலத்தில் உள்ளது அப்படியே தான் இருக்கும் ... இன்னும் பத்தாண்டுகள் போல இந்த பாஸ்போர்ட் போன்ற விஷயங்கள் மொத்தமாக ஒன்லைன் ஆகிவிடும் ..இந்த மாதிரி என்ன மொழியில் உள்ளது எல்லாம் ஒரு மேட்டர் ஆகவே இருக்காது...
Rate this:
Share this comment
Cancel
Appu - Madurai,இந்தியா
24-ஜூலை-201712:29:46 IST Report Abuse
Appu ஆதாரையும் பானையும் நிர்ப்பந்தித்தது கட்டாயப்படுத்த பல மறைமுக வழிகளில் இதுவும் ஒன்றோ?
Rate this:
Share this comment
Cancel
Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா
24-ஜூலை-201712:17:47 IST Report Abuse
Needhiyin Pakkam Nil அடேய் முட்டாள்களே தவறான பாதையை திறந்து விடாதீர்கள், என் வீட்டின் அருகில் குடியிருக்கும் ஒரு இலங்கை தம்பதி அவர்களிடம் ஆதார் அட்டை ஏற்கனவே உள்ளது, தன் இரு மகன்களுக்கு இந்திய பாஸ்போர்ட் எடுப்பதற்கு பிறப்பு சான்றிதழ் கிடைக்காததால் பாஸ்போர்ட் எடுக்க முடியாமல் தவிக்கின்றனர், இந்த செய்தி அவர்களின் காதுகளுக்கு தேனாக அமைந்து விட்டது. இனி அந்த இலங்கை தம்பதிகள் மிக எளிமையாக இந்திய பாஸ்போர்ட் எடுத்து விடுவார்கள். இனிமேல் அவர்கள் இந்திய பிரஜையே. நாடு உறுப்புட்ட மாதிரிதான்....
Rate this:
Share this comment
Cancel
karthik - chennai  ( Posted via: Dinamalar Windows App )
24-ஜூலை-201712:16:52 IST Report Abuse
karthik i like that ...
Rate this:
Share this comment
Cancel
Shanu - Mumbai,இந்தியா
24-ஜூலை-201712:03:56 IST Report Abuse
Shanu இந்தியை பாஸ்ப்போர்ட்டில் சேர்க்க தேவை இல்லை.
Rate this:
Share this comment
Cancel
எம்.ஆர்.பி.குமார் - CHENNAI,இந்தியா
24-ஜூலை-201711:34:00 IST Report Abuse
எம்.ஆர்.பி.குமார் பிறப்பே வேண்டாமென்று சொல்லாமல் விட்டார்களே .
Rate this:
Share this comment
Cancel
natarajan - Bangalore,இந்தியா
24-ஜூலை-201711:18:32 IST Report Abuse
natarajan இதே மாதிரி க்ரீன் கார்டு வாங்கிறதுக்கும் ஏதாவது செய்யுங்கய்யா. முனிசிபாலிட்டி கோட்டாட்சியர்கள் போன்றவர்கள் செய்யும் அட்டகாசம் தாங்கவில்லை சாமி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை