சென்னையில் புத்தகதிருவிழா ஒரு பார்வை| Dinamalar

சென்னையில் புத்தகதிருவிழா ஒரு பார்வை

Updated : ஜூலை 24, 2017 | Added : ஜூலை 24, 2017 | கருத்துகள் (1)
Advertisement

சென்னையில் புத்தகதிருவிழா ஒரு பார்வை

சென்னையில் புத்தக திருவிழா
வழக்கமாக புத்தக திருவிழா என்றால் பொங்கலை முன்னிட்டு தை மாதம் நடைபெறும் புத்தகதிருவிழாதான் நினைவிற்குவரும் இது ஆடிமாதம் நடைபெறும் புத்தகதிருவிழாவாகும்.இனி இதையும் நினைவில் கொள்வோம்.


புத்தக திருவிழாவினை எத்தனை பேர் நடத்தினாலும் அது புத்தக பிரியர்களுக்கு நல்ல விஷயம்தான்.இந்த புத்தக திருவிழாவில் 34வது அரங்கம் எங்கள் தினமலர் அரங்கமாகும்.இங்கு நுால்வெளி என்ற இணையதளம் நேற்று துவங்கிவைக்கப்பட்டது; வாசிப்பாளர்களுக்கு பல பயன்கள் தரக்கூடிய இந்த இணையதளம் பற்றி அறிந்துகொள்ள இங்கு விசிட் செய்யலாம்.
பாரதியார் எழுதியதைவிட பாரதியாரை மையப்படுத்தி எழுதிய புத்தகங்கள் அதிகம் அந்த வகையில் பாரதியார் கவிதையும் உரையும் என்ற புதினம் இடம் பெற்றுள்ளது பாரதியார் கவிதைக்கு உரை தேவையா?என்ற கேள்வியை நுாலசிரியர் எழுப்பி அதற்கு முன்னுரையில் விடையும் தந்துள்ளார்.

கிப்ட் பேக்கேஜ் என்ற முறையில் சில புத்தகங்களை இணைத்து பண்டில்களாக வைத்துள்ளனர்.பட்ஜெட்டிற்கு ஏற்ப வாங்கி பரிசளித்து மகிழலாம்.எந்த புத்தகம் எடுத்தாலும் பத்து ரூபாய் என்றும், ஐநுாறு ரூபாய்க்கும் எம்ஜிஆர் புத்தகம் வாங்கினால் இருநுாறு ரூபாய் மதிப்புள்ள ஜெயலலிதா பற்றிய புத்தகம் அன்பளிப்பு என்றும் சலுகைவிலையிலும் புத்தகங்கள் விற்கப்படுகின்றன.எம்ஜிஆர் பற்றிய புத்தகம் விற்கும் இடத்தில் அவரது புகைப்படங்களை கண்காட்சி போல வைத்துள்ளது ஒரு கூடுதல் சிறப்பு.
புத்தகங்களை படிக்க முடியாதவர்களுக்கு கானோளிப் புத்தகம் என்ற பெயரில் மகாபாரதத்தை காட்சி வடிவத்தில் 'பென்டிரைவ்வில்' பதிந்து அதை ஒலைச்சுவடி போல ஈஷா மையத்தில் விற்கின்றனர்.சாண்டில்யன் புத்தகங்கள் பல கடைகளில் இருக்கின்றன அதில் ஒரு சந்தேகம் ஒரு புத்தகத்தில் இப்போது இடம் பெற்றுள்ள ஒவியர் ஜெயராஜின் அட்டைப்படம்தான் அப்போதைய புத்தகத்திலும் இடம் பெற்றிருந்ததா?என்று.கண்காட்சி இந்த மாதம் கடைசிவரை நடைபெறுகிறது.அனுமதி இலவசம்.


-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.inAdvertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
LAX - Trichy,இந்தியா
31-ஜூலை-201701:31:42 IST Report Abuse
LAX ஆஹா.. அருமை.. ஆனால் நான் இதை இன்றுதான் படிக்கிறேன்.. இந்த புத்தகக் கண்காட்சி இந்த மாதம் கடைசிவரை நடைபெறும் என்றால், இன்றுடன் முடிகிறதா..?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை