கிலானியின் மருமகன் கைது : காஷ்மீரில் என்.ஐ.ஏ., அதிரடி| Dinamalar

கிலானியின் மருமகன் கைது : காஷ்மீரில் என்.ஐ.ஏ., அதிரடி

Added : ஜூலை 24, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில், பிரிவினைவாத தலைவன், சையது அலி ஷா கிலானியின் மருமகன், அல்டாப் அகமது ஷா உட்பட, ஏழு பேரை, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பு, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டிய வழக்கில் கைது செய்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரில், முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையில், பி.டி.பி., - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், சமீபத்தில், ரம்ஜான் பண்டிகை முடிந்ததும், பிரிவினைவாத தலைவன் சையது அலி ஷா கிலானியின் மருமகன், அல்டாப் அகமது ஷாவை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போலீசார் கைது செய்து காவலில் வைத்தனர்.
இந்நிலையில், ஜம்மு - காஷ்மீரில் நடந்து வரும் பயங்கரவாத தாக்குதல்கள் குறித்தும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டப்படுவது குறித்தும், என்.ஐ.ஏ., தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
இந்த அமைப்பு, அல்டாப் அகமது ஷா, கிலானியின் நெருங்கிய கூட்டாளிகளான, அயாஸ் அக்பர், பீர் சைபுல்லா உள்ளிட்ட ஏழு பேரை, கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள நபர்களின் வீடுகளில், இந்த மாத துவக்கத்தில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. தெஹ்ரீக் - இ - ஹுரியத் என்ற பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவனாக, அல்டாப் அகமது ஷா கருதப்படுகிறான்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை