ஏ.டி.எம்., ரசீதுகளை எடுத்து பணம் திருட்டு 'சைபர் க்ரைம்' போலீசார் எச்சரிக்கை Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஏ.டி.எம்., ரசீதுகளை எடுத்து பணம் திருட்டு
'சைபர் க்ரைம்' போலீசார் எச்சரிக்கை

கோவை, ஏ.டி.எம்., ரசீதுகளை எடுத்து, பணம் திருடும் கும்பலைச் சேர்ந்த நபர் சிக்கியுள்ளதால், 'சைபர் க்ரைம்' போலீசார், வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளனர்.

ஏ.டி.எம்., ரசீதுகளை எடுத்து பணம் திருட்டு 'சைபர் க்ரைம்' போலீசார் எச்சரிக்கைவங்கி அதிகாரிகள் போல, போனில் பேசி, வாடிக்கையாளரின், ஏ.டி.எம்., விபரங்களை பெற்று, அவர்களின் கணக்கிலிருந்து பணம் திருடுவது, 'ஆன்லைன்' மூலம் பொருட்களை வாங்குவது போன்ற மோசடிகள் அதிகளவு நடந்து வருகின்றன. இதுபோன்ற மோசடிகளுக்கு, சில தனியார் வங்கி அதிகாரிகளும் உடந்தையாக இருக்கும் தகவல்கள் வெளிவந்தன.

நுாதன முறையில்இதற்கிடையே, சேலத்தில், வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக, பெரிய சாமி, 30, என்பவனை, குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.


விசாரணையில், ஏ.டி.எம்., மையங்களில் கிடக்கும் ரசீதுகளை எடுத்து, அதன் மூலம், வங்கிக் கணக்கு விபரங்களை பெற்று, மதுரையைச் சேர்ந்த ஒருவனுடன் இணைந்து, நுாதன முறையில் பணம் திருடி வந்ததுகண்டுபிடிக்கப்பட்டது.

ரசீதுகளை அங்கேயே போடாதீங்ககோவை, 'சைபர் க்ரைம்' போலீசார் கூறியதாவது:
ஏ.டி.எம்., மையங்களில் பணம் எடுக்கும் போது வரும் ரசீதுகளில், வங்கிக் கணக்கின், கடைசி நான்கு எண்கள் மட்டுமே வரும். இந்த எண்களை வைத்து, ஒருவரின் வங்கிக் கணக்கில், பணத்தை எடுத்துவிட முடியாது. ஆனால், குறிப்பிட்ட கடைசி நான்கு எண்களை வைத்து, வங்கி அதிகாரிகளின் துணையுடன், வாடிக்கையாளர்களின் கணக்கு விபரங்கள் பெறப்பட்டிருக்கலாம்.
இதன்மூலம், வங்கிக் கணக்கில் இருந்து, 'ஆன்லைன்' மூலம் பொருட்களை வாங்கி, மோசடிசெய்திருக்க வாய்ப்பு உள்ளது.ஏ.டி.எம்., மையங்களில் பணத்தை எடுக்கும் நபர்கள், அதில் வரும் ரசீதுகளை அங்கேயே போடாமல் எடுத்து செல்ல வேண்டும். இதுபோன்ற

Advertisement

மோசடிகள் குறித்து, கல்லுாரி மாணவர்கள் மூலம், பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
நுாதன மோசடிகளில் ஈடுபடும் நபர்கள் குறித்து தகவல் கிடைத்தால், 'சைபர் க்ரைம்' போலீசாரிடம் தெரிவிக்கலாம்.இவ்வாறு போலீசார் கூறினார்.

திருடர்கள் கையில் தொழில்நுட்பம்!வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடி, மோசடி செய்யும், 'சைபர்' குற்றங்கள் அதிகளவு நடக்கின்றன. இதற்கு, மோசடி நபர்கள் பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்துகின்றனர். ஆனால், மோசடி நபர்களை பிடிக்கும் அளவுக்கு, 'சைபர் க்ரைம்' போலீசாரிடம்
நவீன தொழில்நுட்ப வசதிகள் இல்லை என்பதே உண்மை.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ezhumalaiyaan - Chennai,இந்தியா
25-ஜூலை-201718:46:04 IST Report Abuse

ezhumalaiyaanவங்கி வாடிக்கையாளர்களின் பொறுப்பற்ற தன்மையே காரணம் .ரசீது தேவையா என்று மிஷின் கேட்கிறது. தேவை இல்லை என்று தகவல் கொடுத்தால் ரசீது வராது. ஒருவேளை தேவை என்று சொன்னால் ரசீது வரும். கணக்குக்கு உரியவர் ரசீதைப் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும் அல்லது வேறு இடத்தில அதை அழிக்க வேண்டும்.பொறுப்பற்ற தன்மையில் விட்டு செல்வது, குற்றவாளிகளுக்கு ஏதுவான சூழ்நிலையை நாமே உருவாக்கி கொடுப்பது நாமேதான். ATM அறையிலேயே ரசீதுகளை விட்டு செல்லுவது தவறு.

Rate this:
Samban - Chennai,இந்தியா
25-ஜூலை-201718:00:25 IST Report Abuse

Sambanதிருடர்கள் கையில் தொழில்நுட்பம் வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடி, நவீன தொழில்நுட்ப வசதிகள் இல்லை என்பதே உண்மை. என்னதான் சொல்ல வர்ரானுங்க........தொழில்நுட்பம் வேணுமா வேண்டாமா?????????? நவீன தொழில்நுட்பம் கொண்டுவந்தாமட்டும் சரி ஆயிடுமா............திருடனை வீட்டுக்குள்ளயே வச்சிக்கிட்டு பொதுமக்களை எச்சரிக்கிறாங்க எச்சையிங்க...........இந்த செய்தி எழுதினது ஒரு மொக்க ........

Rate this:
Kundalakesi - Coimbatore,இந்தியா
25-ஜூலை-201713:32:58 IST Report Abuse

Kundalakesiதண்டனை அதிகமானால் குற்றம் ஒழிந்து விடும்.

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
25-ஜூலை-201709:32:34 IST Report Abuse

Srinivasan Kannaiyaநவீன தொழில்நுட்ப வசதிகள் முதலில் குற்றவாளிகளை தான் வந்து அடைகிறது. அவர்கள்தான் அதற்கு நெறைய விலை தருவார்கள்.

Rate this:
JAYARAMAN - CHENNAI,இந்தியா
25-ஜூலை-201708:02:27 IST Report Abuse

JAYARAMANWhat is the need to print last 4 digits of card number in slip. Trn no., bank name and date will be sufficient.

Rate this:
guru - Trichy,இந்தியா
25-ஜூலை-201712:54:08 IST Report Abuse

guruif you want to do any complaint (i.e. cash debited from a/c but no physical cash) how can you claim without your account number in bill?...

Rate this:
Samban - Chennai,இந்தியா
25-ஜூலை-201718:02:55 IST Report Abuse

SambanA transaction number is enough.......all the other details need not be disclosed in the receipt. we can track the transaction details including amount, account number etc with this transaction number itself...........

Rate this:
guru - Trichy,இந்தியா
26-ஜூலை-201715:24:42 IST Report Abuse

guruohh is it so? thank you for your information samban...

Rate this:
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
25-ஜூலை-201707:12:24 IST Report Abuse

தங்கை ராஜாஅலட்சியம் ஆபத்தை தரும்.

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
25-ஜூலை-201702:55:35 IST Report Abuse

Kasimani Baskaranதொழில் நுட்ப திருட்டை தடுக்க முனைகிறது - ஆனால் சில தருதலை அதிகாரிகள் சட்டத்துக்கு புறம்பாக கணக்கு விபரங்களை அடுத்தவர்களுக்கு கொடுத்து வருகிறார்கள்... அவர்களை முதலில் அடையாளம் காணவேண்டும்...

Rate this:
Sitaramen Varadarajan - chennai,இந்தியா
25-ஜூலை-201709:57:53 IST Report Abuse

Sitaramen Varadarajanதிரு காசிமணி பாஸ்கரன் அவர்களே... அரைகுறையாக நிறுத்தி விட்டீர்களே.. பொதுமக்களின் பணத்தில் லக்ஷக்கணக்கில் சம்பளம் பெற்று பொது மக்களுக்கு துரோகம் செய்யும் வங்கி அதிகாரிகளை பொது இடத்தில் வைத்து சவுக்கடி கொடுத்து..... பதவியில் இருந்து நீக்கி... சொத்துக்களை பறிமுதல் செய்து......

Rate this:
soundararajan - Udumalaipettai,இந்தியா
28-ஜூலை-201720:14:42 IST Report Abuse

soundararajanஅப்படியானால், நமது வரியில் இருந்து சம்பளம் பெற்று, நம்மையே கொள்ளை அடிக்கும், ஏமாற்றிக்கொண்டு இருக்கும் எம். எல். ஏ மற்றும் மந்திரிகளுக்கு, என்ன மாதிரியான தண்டனை கொடுப்பது ?...

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement