‛4 நாட்களுக்கு அதிக வெப்பம்': வானிலை மையம் எச்சரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

‛4 நாட்களுக்கு அதிக வெப்பம்': வானிலை மையம் எச்சரிக்கை

Added : ஜூலை 25, 2017 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
வானிலை மையம், Weather Center, meteorological center, தமிழகம், Tamilnadu, தென்மேற்கு பருவமழை, Southwest Monsoon, சென்னை,Chennai,  கேரளா, Kerala, புதுச்சேரி, Puducherry, மழை , Rain

சென்னை: தென்மேற்கு பருவமழை வலு குறைந்து காணப்படுவதால், தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


28% மழை குறைவு:

இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: தமிழகம் மற்றும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை வலு குறைந்து காணப்படுகிறது. இதனால் கடந்த 3 நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. ஜூலை 24ம் தேதி வரை 100 மி.மீ., மழை பெய்திருக்க வேண்டிய நிலையில், 70 மி.மி., மழையே பெய்துள்ளது. இந்த ஆண்டு 28% குறைந்து பெய்துள்ள மழை, 2016ல் 3 சதவீதமும், 2015ல் 7 சதவீதமும், 2014ல் 11 சதவீதமும் குறைவாக பெய்துள்ளது.

4 நாட்களுக்கு வெப்பம் நீடிப்பு : வானிலை மையம்


4 நாட்களுக்கு..

தமிழகத்தில் இன்று முதல் 28ம் தேதி வரை அதிகமாக வெப்பத்தின் தாக்கம் இருக்கும். கடலோர மாவட்டங்களை காட்டிலும் உள்மாவட்டங்களில் இயல்வை விட 3 முதல் 4 டிகிரி அதிக வெப்பம் நிலவும். ஜூலை 29 முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sam - chennai,இந்தியா
25-ஜூலை-201715:07:19 IST Report Abuse
sam அதிக  வெப்பமும்   குறைவான  மழையும்  வறட்சி  எல்லாம் அராஜக ஆட்சியாளர்களால்  ஏற்படும் என்பது எவ்வளவு உண்மையோ அதே போல  சாலை விதிகள் முதல் எல்லாவற்றிலும் சட்டம்  நியாயம் நேர்மை தெய்வம்  எதையும் மதிக்காத  மக்களும் காரணம்  என்பதையம் மறுக்க முடியாத உண்மை
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
25-ஜூலை-201714:58:52 IST Report Abuse
Pasupathi Subbian நீரின்றி வாடுது தமிழகம். போர் போடும் வேலை ஜரூராக நடைபெறுகிறது, தண்ணீர் லாரிகள் ஓடி ஓடி சம்பாதிக்கின்றன. மக்களிடம் வறுமை மட்டுமே நிலவுகிறது.
Rate this:
Share this comment
Cancel
தனசேகர் - சென்னை ,இந்தியா
25-ஜூலை-201713:45:32 IST Report Abuse
தனசேகர் இந்த ஆண்டு போகட்டும். எதிர்வரும் காலங்களிலாவது வறட்சி ஏற்படும் பட்சத்தில் சமாளிக்கும் வகையில் நீர் நிலைகளை செம்மைப்படுத்தி மழை நீர் வீணாக கடலில் கலப்பதைத் தவிர்த்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவது அவசியம். மழை நீரை முழுமையாக சேமித்தாலே போதும். வறட்சிக் காலங்களை சமாளிக்க இயலும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X