ஜி.எஸ்.டி.,க்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு: பிரதமர் மோடி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஜி.எஸ்.டி.,க்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு: பிரதமர் மோடி

Added : ஜூலை 25, 2017 | கருத்துகள் (207)
Advertisement
ஜி.எஸ்.டி, GST, Goods and Services Tax, மோடி, modi, பிரதமர், PM, prime minister, புதுடில்லி, NEW DELHI, ரூபாய் நோட்டு வாபஸ் ,banknote withdrawal, demonetization, பிரதமர் நரேந்திர மோடி, Prime Minister Narendra Modi,ராஜஸ்தான்,Rajasthan, எம்.பி,MP, பா.ஜ., BJP,

புதுடில்லி: ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்பட்டதற்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.


நல்லது நடக்காது:

பிரதமர் மோடி ராஜஸ்தான் எம்.பி.,க்களை டில்லியில் சந்தித்து பேசினார். அவர்கள் மத்தியில் மோடி பேசியது குறித்து பா.ஜ., சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது: தேர்தல் வெற்றிக்காக கடைபிடிக்கப்படும் மென்மையான பொருளாதாரக் கொள்கையால் நாட்டுக்கு நல்லது நடக்காது. இது நாட்டு மக்களுக்கும் தெரியும்.


அமோக ஆதரவு:

நம் அரசு வரலாற்று சிறப்பு மிக்க பொருளாதார நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்பட்டதற்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவு ஏற்பட்டுள்ளது. ஆட்சியில் பா.ஜ., அரசு ஊழலற்ற நேர் வழியில் பயணிக்கிறது. இதை தான் மக்கள் விரும்புகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X