கல்யாணத்தை கலகலப்பாக்கும் முத்தரசு| Dinamalar

கல்யாணத்தை கலகலப்பாக்கும் முத்தரசு

Updated : ஜூலை 25, 2017 | Added : ஜூலை 25, 2017 | கருத்துகள் (3)
Advertisement

கல்யாணத்தை கலகலப்பாக்கும் கேன்டிட் போட்டோகிராபர் முத்தரசு...

கடந்த வாரம் சென்னை இமேஜ் புகைப்பட தொழில் நுட்ப கண்காட்சியில், பெஸ்ட் போட்டோகிராபி டுடே தமிழ் இதழின் சார்பாக புகைப்படத்துறையில் பல்வேறு சாதனைகள் புரிந்துவரும் புகைப்படக்கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் சென்னை மாநகரத்தின் சிறந்த இயல்பு நிலை (கேன்டிட் போட்டோகிராபி பிரிவு) புகைப்படக்கலைஞர் -2017 விருது வாங்கி இருக்கிறார் தயா போட்டோகிராபி நிறுவனத்தின் எஸ்.டி.முத்தரசு.

இன்றைய திருமணத்தில் கேன்டிட் போட்டோகிராபி என்பது தவிர்க்க இயலாத விஷயமாகிவிட்டது என்ற நிலை மாறி இன்னும் ஒரு படி மேலே போய் மாப்பிள்ளையும் பெண்ணையும் மற்றும் அவர்களது தோழி தோழர்களை வைத்து வேடிக்கையாக படமெடுப்பது என்ற நிலையும் வந்துள்ளது.இது மணமக்களை உடனடியாக நெருக்கமான இதமான சூழ்நிலைக்கு கொண்டுசெல்லக்கூடிய நல்ல அம்சம் இருக்கிறது.
எவ்வளவு செலவு செய்து திருமணம் நடத்தினாலும் கடைசி வரை நினைவிற்கு வருவது சாப்பாடோ , திருமண மண்டப அலங்காரமோ கிடையாது புகைப்பட ஆல்பம்தான் ஆகவே இப்போது அதில் சமரசம் செய்து கொள்ளாமல் மணமக்களே தங்களது தேவை என்ன என்பதை சொல்லிவிடுகின்றனர் திருமணத்திற்கு பிறகு நடக்கும் சூட்டிற்கு எங்கே போகவேண்டும் என்பதைக்கூட அவர்களே தீர்மானிக்கின்றனர்.

இதை உணர்ந்து திருமண புகைப்படக்கலைஞர் என்ற முறையில் நானும் நடந்து கொள்வதால் குறுகிய காலத்தில் எனது புகைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது, அதற்கான அங்கீகாரமாக இந்த விருதினை பெருமையாக கருதுகிறேன் என்றார்.
முத்தரசுவை வாழ்த்துவதற்கான எண்:9094695950.

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.inAdvertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kailash - Chennai,இந்தியா
07-ஆக-201701:02:24 IST Report Abuse
Kailash பெரும்பாலும் IT துறைதான் இந்த கேவலமான கலாசாரம் இருக்கிறது. சினிமா ஹீரோ/ ஹீரோயின் என்று நினைப்பு கொண்டு அழைக்கின்றனர் இந்த உத்தியை வைத்து கலைஞர்கள் புது புது பெயர் வைத்து காசாகின்றனர். முதல் திருமணத்தில் இப்படி வித விதமாக போஸ் கொடுப்பார்கள் அடுத்த சில ஆண்டுகளில் விவாகரத்து வாங்கிவிட்டு இரண்டாவது, மூன்றாவது திருமணத்தில் கொஞ்சம் அடக்கி வாசிப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Nallappan Kannan Nallappan - Perambalur,இந்தியா
26-ஜூலை-201709:34:43 IST Report Abuse
Nallappan Kannan Nallappan லூசு தனமா இருக்கு கோமாளிகள்
Rate this:
Share this comment
Cancel
A.sivagurunathan - coimbatore,இந்தியா
25-ஜூலை-201720:09:13 IST Report Abuse
A.sivagurunathan திரைப்படங்களில் பார்த்த காட்சிகளை நமது திருமண ஆல்பங்களில் பார்ப்பது பிரமிப்பு ஏற்படுத்த கூடிய விசயம். வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை