மனசை மயக்கும் மந்திரக்காரி - ஆர்ப்பரிக்கும் அகிலா| Dinamalar

மனசை மயக்கும் மந்திரக்காரி - ஆர்ப்பரிக்கும் அகிலா

Added : ஜூலை 27, 2017
Advertisement
மனசை மயக்கும் மந்திரக்காரி - ஆர்ப்பரிக்கும் அகிலா

காணும் கண்பார்வை செவ்விளநீர் சுகம்; குளிரும் பேச்சிலோ ஜிகர்தண்டாவும் உருகும்; வண்ண மலர்ச்செண்டாக மலரும் முகம்; தென்றல் காற்றோடு இவள் வாசனை உலவும்; நடையை நடனத்தை பிரித்தறிய முடியா நாகரிக நங்கையிவள், குயிலின் தோட்டத்தில் உலவும் மயிலாய், காதம்பரியில் அறிமுகமாகிறார் அகிலா. தினமலர் வாசகருக்காக தேன்தமிழில் பேசியது
* அறிமுகம்?பிறந்தது கோயம்புத்துார். வளர்ந்தது, படிச்சது அமெரிக்கா. இப்போ சென்னையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசைக் கல்லுாரியில் 2ம் ஆண்டு படிக்கிறேன்.
* அமெரிக்காவில்...ஆமா. அமெரிக்காவில் படிக்கும் போதே, 'மாடலிங்' பண்ணிட்டு இருந்தேன். சென்னைக்கு படிக்க வந்தப்போ நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
* முதன் முதல்?முதல் படமே எனக்கு பேய் படம். படத்தோட பேரு 'காதம்பரி'.
* 'நீலாம்பரி'யோ?அட போங்க சார். 'படையப்பா'ல எப்படி நீலாம்பரியோ. அதுமாதிரி 'காதம்பரி'ல நான் தான். படத்துல எனக்கு பேய் பிடிச்சுடும். எனக்கும் 'பேய்'னா ரொம்ப பிடிக்கும். படத்துக்காக முழுசா பேயா மாறிட்டேன். நிச்சயமா நிஜத்துலல்லாம் அப்படி இல்லப்பா!
* பயம்?கொஞ்சம் இருக்கு. ரசிகர்கள் மனசுல நாம எப்படிடா இடம் பிடிக்குறது. பிடிச்சப்புறம் எப்படி தக்க வைக்கிறதுனு பயம் இருக்குது.
* ஆசை?கும்கி, மைனா படங்கள்ல வர்ற கிராமத்து பொண்ணு வேடம்தான். இன்னும் அந்த மாதிரி கதைகள் எனக்கு கிடைக்கல.
* பாடல்?நான் நல்ல 'சிங்கர்'ங்க... அமெரிக்காவுல இருக்கும் போது நிறைய தமிழ்ப் படப் பாடல்களை, என் வாய்ஸ்ல பாடியிருக்கேன். இப்போ, நான் நடிக்கிற படத்துலயும் ஒரு பாட்டு சான்ஸ் கிடைச்சு பாடியிருக்கேன்.
* இசை?இசையை யாருக்கு தான் பிடிக்காது. பியானோ, வயலின், வாசிக்க தெரியும். இசையில், ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத், ஹிப்ஹாப் ஆதியை பிடிக்கும்.
* பிடித்தமானவை?தமிழ்நாடு பிடிக்கும். கூடவே பொங்கல், சாம்பார் ரொம்ப ரொம்ப பிடிக்கும். தமிழ் பாட்டுன்னா எனக்கு உயிரு. நடிகை பிரியங்கா சோப்ரா, விஜய், தனுஷ்.
*அகிலா, அழகுக்காக?பெருசா ஒன்னும் இல்லீங்க. நம்மளும் நம்ம மனசும் சந்தோஷமா இருந்தா மத்தவங்களுக்கு நாம அழகாத்தான் தெரிவோம். இதுதான் காரணம் போதுமா, சிம்பிள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X