ஆஹா ஆனந்தி| Dinamalar

ஆஹா ஆனந்தி

Added : ஜூலை 27, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ஆஹா ஆனந்தி

கயல் நீந்தி விளையாடும் கடல் கண்கள்... தேன் சிந்தி பூக்கும் இதழ் பூக்கள்... பொன் நகையும் பொறாமைப்படும் ஜொலிக்கும் புன்னகை, இளசுகள் மனசுக்குள் காதல் மணி அடிக்கும் தேவதை... அழகெல்லாம் ஆஹா... என ஆசையாய் பார்த்து வியக்கும் நடிகை ஆனந்தி பேசுகிறார்..
* 'பண்டிகை' படம்? பண்டிகை ஒரு திருவிழா படம் அல்ல, ஆக்ஷன் படம். காதல் காட்சிகள் நல்லா வந்திருக்கு, நான் காமெடி கூட பண்ணியிருக்கிறேன்.
* ஹீரோ கிருஷ்ணா... நிறைய பியூட்டி டிப்ஸ் எல்லாம் கொடுப்பார். ஷூட்டிங்கில் எனக்கு மிகவும் உதவியாக இருந்தார்.
* படத்தில் நடிக்கும் முன் கண்டிஷன்? முதலில் என் கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும். இயக்குனர்கள், என்னால் இந்த கேரக்டரில் நடிக்க முடியும் என்று என் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அப்படித் தான் படங்களை முடிவு செய்கிறேன்.
* நீங்க நடித்ததில் பாதித்தது ? 'திரிஷா இல்லைனா நயன்தாரா' படத்தில் ஏன் நடித்தோம் என்று யோசித்தேன். படம் வந்த பின் எழுந்த விமர்சனங்கள் என்னை மிகவும் பாதித்தது. இனி இந்த தவறை செய்ய மாட்டேன். அதனால் தான் இப்போது முழு கதையையும் கேட்டுவிட்டு ஓ.கே., சொல்கிறேன்.
* விரும்பும் கேரக்டர் ? 'பாகுபலி'யில் வந்த தேவசேனா கேரக்டர் எனக்கு பிடிக்கும். சிம்பிள் கேரக்டர்ல நித்யாமேனன் நிறைய படங்களில் நடிக்கிறார். அந்த மாதிரி வாய்ப்பு கிடைத்தால் ஐயாம் ரெடி.
* மேக்அப் இல்லாமல்... எனக்கு மேக்கப் மீது ஆர்வம் இல்லை, சிம்பிளா இருக்க தான் பிடிக்கும்.
* ஸ்ரீதிவ்யாவுக்கும், உங்களுக்கும்... எல்லோருக்கும் அவங்க கேரக்டருக்கு ஏற்ப படங்கள் கிடைக்கும். அவங்களுக்கு கிடைக்க வேண்டிய படங்கள் அவங்களுக்கும், எனக்கு வரவேண்டிய படங்கள் எனக்கும் கிடைக்கிறது. இந்த துறையை பொறுத்தவரை போட்டி இருந்தா தான் திறமைகள் வெளிப்படும்.
* சமூக வலைதளங்கள்? எனக்கு 'சாட்' பண்ணி நேரத்தை வீணாக்க பிடிக்காது. ஏதாவது முக்கியமாக இருந்தால் மட்டும் 'டுவிட்டர்'ல பதிவு செய்வேன் அவ்வளவு தான்.
* திருமணம்? எனக்கு இப்போது 21 வயசு தான் ஆகுது... அதனால், இப்போ கல்யாணம் பற்றி யோசிக்கலை. எங்க வீட்டில் எல்லோருக்கும் பெற்றோர் பார்த்து நடத்திய திருமணம் தான், எனக்கும் அந்த மாதிரி தான் நடக்கும்னு நம்புறேன்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X