மேற்கு தொடர்ச்சி மலை...லெனின் பாரதியின் கனவு சினிமா| Dinamalar

மேற்கு தொடர்ச்சி மலை...லெனின் பாரதியின் கனவு சினிமா

Added : ஜூலை 27, 2017
Advertisement
மேற்கு தொடர்ச்சி மலை...லெனின் பாரதியின் கனவு சினிமா

குறிக்கோளோடு சினிமா துறையில் நுழைந்தவர். சினிமாவுக்கே உரிய கேலி, கிண்டல், கிளாமர். நையாண்டியை ஓரங்கட்டி, சமூகத்திற்கு ஏதாவது கருத்தைச் சொல்ல வேண்டுமென கதை எழுதியவர். 'மேற்கு தொடர்ச்சி மலை' படத்தில் அறிமுகமாகி இயக்குனர் அவதாரம் எடுத்தவர் லெனின் பாரதி.
* ஊரு பேரு...?தேனி மாவட்டம் கோம்பை. படிச்சது பி.ஏ.,
* சினிமா ஆசை?அப்பா ரங்கசாமியும், இசைஞானி இளையராஜாவும் நண்பர்கள். இருவரும் சேர்ந்து நாடகங்கள், விழிப்புணர்வு பிரசாரங்கள் எல்லாம் பண்ணியிருக்காங்க. அப்பாவுக்கு இயக்குனர் ஆகணும்னு ஆசை. ஆனா, குடும்ப சூழ்நிலை காரணங்களால் அது நடக்கல. அதான், அப்பா ஆசையை நிறைவேற்றலாம்னு... அதுமட்டுமில்லே... சமூகத்துக்கும் ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை சொல்லணும்னுதான் வந்தேன்.
* அனுபவம்?'வெண்ணிலா கபடிக் குழு', 'நான் மகான் அல்ல', 'அழகர் சாமியின் குதிரை' படங்களில் இணை இயக்குனராக வேலை பார்த்தேன். 'ஆதலால் காதல் செய்வீர்' படத்துல கதையாசிரியர் நான் தான்.
* நீங்க இயக்கிய படம்?'மேற்கு தொடர்ச்சி மலை'. விரைவில் ரிலீஸ் ஆக போகுது.
*மேற்கு தொடர்ச்சி மலையா?தேனி மாவட்டத்துக்கும், கேரள எல்லைக்குமான இடம் தான் மேற்கு தொடர்ச்சி மலை. அந்தப் பகுதி மலைவாழ் மக்கள், கேரள எல்லையில வேலை பார்க்கிற போது படுற கஷ்டம், அதுல மறைமுகமாக நடக்கிற அரசியல் பத்தின கதை.
* படத்துல நடிகர்கள்?கதாநாயகன், நாயகியை தவிர, படத்துல நடிச்சவங்க எல்லாருமே அந்த ஊர் மக்கள் தான். கதைக்கு ஏற்ப நடிப்பு இருக்கணுங்குறதால கதாநாயகன் ஒரு வருஷம் அந்த மக்களோடு கூலி வேலைக்கு போனார். கதாநாயகி ஒரு மாதம் போனாங்க.
* படத்துல இசை?எங்க ஊருக்காரர் இசைஞானி இளையராஜா. ஒரு பாட்டை அவரே எழுதியிருக்காரு. * தயாரிப்பாளர் விஜய்சேதுபதி யாமே?துணை நடிகரா படங்கள்ல நடிக்கும் போதே அவரை எனக்கு தெரியும். கதை கேட்டுட்டு நானே தயாரிக்கிறேன்னு சொன்னாரு.
* படத்துக்கு என்ன விருது?ஆமாங்க. படம் ரிலீஸூக்கு முன்னாடியே சிறந்த திரைக்கதை, ஒளிப்பதிவு, சிறந்த படத்துக்கான விருதுகளும் கிடைச்சுருக்கு.
* இளைஞர்களுக்கு?இந்த கால இளைஞர்களுக்கு எல்லாமே தெரியுது. எது நமக்கு நல்லதுன்னு படுதோ அதை மட்டும் பண்ணுங்க. நல்ல விஷயத்தை மத்தவங்களும் கொண்டு போங்க. உங்க திறமையை வளர்த்துக்கோங்க. நிச்சயம் ஒருநாள் சாதிக்கலாம்.இவரிடம் பேச... Vsp.mtm@gmail.com.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X