தல...தளபதி...தனுஷ்...பாரதா நாயுடு பர...பர !| Dinamalar

தல...தளபதி...தனுஷ்...பாரதா நாயுடு பர...பர !

Added : ஜூலை 27, 2017
Advertisement
தல...தளபதி...தனுஷ்...பாரதா நாயுடு பர...பர !

மான் விழியால் இளசுகளை மயக்கும் மாயவள்.. சிரிப்பழகை காண எகிப்தின் மம்மியும் இமை திறக்கும்..கவிஞனின் கற்பனைக்கும் எட்டாத அழகு தேவதை. 'அட்ரா மச்சான் விசிலு' என ரசிகர்கள் கொண்டாடி மகிழ தமிழகத்திற்கு புதிய வரவாய், 'தேன் மிட்டாய்' சுவையாய், சினிமாவில் தடம் பதித்த நடிகை பாரதா நாயுடு தினமலர் வாசர்களுக்காக மனம் திறந்த நிமிடங்கள்..இதோ
* பிறந்தது..வளர்ந்தது... படித்தது.. ஆந்திர மாநிலம் குண்டூர் தான் சொந்த ஊர். படிப்பு எல்லாம் பெங்களுரூல. பேஷன் டெக்னாலஜி முடித்துள்ளேன். அதனால தமிழ் நன்றாக தெரியும்.
* நடிப்பில் ஆர்வம்..
பள்ளி, கல்லுாரி விழாக்களில் நாடகத்தில் நடித்து பரிசுகள் பெற்றுள்ளேன். இதுவே சினிமாத்துறைக்கு வர உத்வேகமாக அமைந்தது.
* சினிமாவில் வந்தது..
'அட்ரா மச்சான் விசிலு' படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த போதே, 'தேன் மிட்டாய்' படத்தில் ஹீரோயின் வாய்ப்பு அமைந்தது. அதைத்தொடர்ந்து நிரஞ்சனா படத்தில் ஹீரோயினா மாறி உள்ளேன்.
* பொழுதுபோக்கு..
பிடித்த பாடல்களை பாடிக்கொண்டே இருப்பேன். நன்றாக டான்ஸ் ஆடுவேன்.
* கேமரா முன் முதல் அனுபவம்..
ரொம்ப பயமாக தான் இருந்தது. என்னோட முதல் படம் 'அட்ரா மச்சான் விசிலு' குழு நல்ல ஒத்துழைப்பு தந்ததால், பயம் கொஞ்சம், கொஞ்சமாக மறைந்தது.
* பிடித்த இயக்குனர்..
ஷங்கர், மணிரத்னம், ஏ.ஆர். முருகதாஸ் பிடிக்கும். ஆனால் பாலா படத்தில் நடிக்க வேண்டும் என்பதே என் கனவு. அவரது படங்களில் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதே அவரது ஸ்பெஷல்.
* ரோல் மாடல்..
கங்கனா ரனாவத், விஜயசாந்தி. இருவருமே என்ன சொல்ல வேண்டுமோ அதை சிங்கிள் பிரேமில் சொல்லிவிடுவார்கள்.
*யாருடன் நடிக்க ஆசை..
டிரிபிள் 'த'. புரிகிற மாதிரி சொல்லனும்னா, தல, தளபதி, தனுஷ்.
* தமிழ் ரசிகர்கள்...
ஐயோ செம ஆதரவு கொடுக்கிறாங்க...படிப்பிடிப்பு தளத்தில வேடிக்கை பார்க்க வர்றவங்க கூட கைதட்டி உற்சாக படுத்துவாங்க. கிண்டலும் நக்கலும் அதிகமாக பண்ணுவாங்க. என் ரசிகர்களை விரும்புகிறேன்.வாழ்த்த subhabharatha310@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X