கரன்சி நோட்டுகளை ஆய்வு செய்ய 50 இயந்திரங்கள் வாங்க திட்டம் Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
கரன்சி நோட்டுகளை ஆய்வு செய்ய
50 இயந்திரங்கள் வாங்க திட்டம்

புதுடில்லி:செல்லாததாக அறிவிக்கப்பட்டவை உட்பட, அனைத்து ரூபாய் நோட்டு களை, பிரித்தல், எண்ணுதல் போன்ற பணிகளுக்காக, கரன்சியை ஆய்வு செய்யும், 50 இயந்திரங் களை வாங்க, ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

 கரன்சி, Currency,ஆய்வு, Research,இயந்திரங்கள்,Machines,புதுடில்லி, New Delhi,  ரிசர்வ் வங்கி,Reserve Bank, மைக்ரோபிராசசர்,MicroProcessor,  கறுப்புப் பணம் , Black Money,கள்ள நோட்டு,Counterfeit Note, டிபாசிட், Deposit, கரன்சி சோதிக்கும் இயந்திரங்கள், Currency Testing Machines,

இது குறித்து, ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் கூறியதாவது:


நாடு முழுவதும், ரிசர்வ் வங்கியின், 18 பிராந்திய அலுவலகங்களில் நிறுவு வதற்காக,

50 கரன்சி சோதிக்கும் இயந்திரங்கள் வாங்க, ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. இதற்காக, உலகளவில், ஒப்பந்தங்களை, ரிசர்வ் வங்கி கோரியுள்ளது. இவ்வாறு பெறப்படும் இயந்திரங் கள்,கம்ப்யூட்டர் அடிப்படை யில், 'மைக்ரோபிராசசர்' கட்டுப்பாட்டில் செயல்பட வேண்டும். மக்கள் பயன்பாட்டிற்கு விடக்கூடிய அல்லது நிராகரிக்கக் கூடிய, கரன்சி நோட்டுகளை, இந்த இயந்திரங்கள் கண்டறியும். நோட்டுகளை எண்ணுதல், பிரித்தல் உள்ளிட்ட பணிகளை, இவை செய்யும்.

இந்த இயந்திரங்கள், புதிய நோட்டுகளை மட்டுமல் லாது, செல்லாததாக அறிவிக்கப்பட்ட, பழைய, 500 -1,000 ரூபாய் நோட்டுகளையும் ஆய்வு செய்யும் வகையில் இருத்தல் வேண்டும் என, ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் கூறின.

கறுப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கில், கடந்தாண்டு, மத்திய அரசு, செல்லாத ரூபாய் நோட்டு திட்டத்தை அறிவித்தது.

Advertisement

அந்த தேதியில், நாடு முழுவதும், 1,716 கோடி, 500 ரூபாய் நோட்டுகளும், 685 கோடி, 1,000 ரூபாய் நோட்டுகளும், புழக்கத்தில் இருந்தன. வங்கிகளில், 'டிபாசிட்' செய்யப்பட்ட, செல்லாத ரூபாய் நோட்டு கள் எண்ணிக்கையை, ரிசர்வ் வங்கி, இதுவரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
31-ஜூலை-201719:42:42 IST Report Abuse

Pugazh Vஅந்த 500 ., 1000 கரன்சி எல்லாமே நீங்க அடிச்ச ரூபா நோட்டுகள் தானே சார். அப்புறம் என்ன புண்ணாக்கு ஆய்வு? அப்படியே அதில் ஒரு பகுதி டுபாக்கூர் கரன்சியாக இருந்தால் என்ன பண்ணப் போறீங்க? பதினாலு கோடி ரூபாய் பழைய நோட்டுகள் வந்ததா சொன்னீங்க அதையெல்லாம் எரிச்சு போட்டுட்டு வேற வேலையைப் பாப்பீங்களா ஆய்வு பண்ணிக்கிட்டு..அப்படியே ஆய்வு செஞ்சு ஏதாச்சும் கண்டு பிடிச்சுட்டாலும்...

Rate this:
Indian - Shelton,யூ.எஸ்.ஏ
31-ஜூலை-201716:24:36 IST Report Abuse

Indianமோடியின் பித்தலாட்டம் தெள்ள தெளிவாக தெரிகிறது

Rate this:
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
31-ஜூலை-201713:52:54 IST Report Abuse

Rangarajan PgRBI IS UNBELIEVABLY PROACTIVE AND VERY QUICK TO ACT. KUDOS

Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X