'ஆட்சியை அகற்ற தயங்க மாட்டோம்!' Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'ஆட்சியை அகற்ற தயங்க மாட்டோம்!'

சென்னை: 'முதல்வர் பழனிசாமி அரசுக்கு முடிவு கட்ட, தி.மு.க., என்றும் தயங்காது' என, அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:

தி.மு.க.,வின் துார்வாரும் பணியை தடுத்து, அரசியல் செய்யும் முதல்வர் பழனிசாமி, 'தி.மு.க., அரசியல் செய்கிறது' என, வாய்க்கு வந்தபடி, அரசு விழாவில் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது.

துார்வாரும் போது அகற்றப்படும் வண்டல் மண், சவுடு மண், விவசாயிகளுக்கு கொடுக்க ப்படுகிறது என்கிறார். யார், யாருக்கு கொடுக்க பட்டது; அவற்றை அள்ளிச் சென்றவர்களில்,

அ.தி.மு.க.,வினர் எத்தனைபேர்.தமிழகத்தில், 100 கோடி ரூபாய்க்கு குடிமராமத்துப் பணிகள் நடந்திருப்பதாக கூறும் முதல்வர், அந்தப் பணிகள், அ.தி.மு.க.,வினருக்கு வழங்கப்பட வில்லை என நிரூபிக்க முடியுமா?

இல்லையென்றால், இதுவரை நடந்த குடிமராமத்து பணிகள் குறித்து, விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். 'குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கின்ற னர்' என, மற்றொரு குற்றச்சாட்டையும், அவர் சுமத்தி உள்ளது, இந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவை.

அ.தி.மு.க., என்ற குழம்பிய குட்டையில், பழனிசாமி மீன் பிடித்து கொண்டிருக்கிறார் என்பது மக்களுக்கு

Advertisement

 ஆட்சி, Government, சென்னை, Chennai, முதல்வர் பழனிசாமி, Chief Minister Palanisamy, தி.மு.க, DMK, ஸ்டாலின் , Stalin, விசாரணை,Investigation,அ.தி.மு.க., AIADMK,  அராஜகம், 
Anarchy, ஊழல், Corruption,

தெரியும். தொடரும்அராஜகம், ஊழல் காரண மாக, தமிழகத்தின் வளர்ச்சியை, 20 ஆண்டு களுக்கு பின்னோக்கி தள்ளிவிட்ட, பழனிசாமி அரசுக்கு முடிவு கட்ட, தி.மு.க., என்றும் தயங் காது. ஜனநாயக ரீதியிலான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, தி.மு.க.,வை மிரட்டி விடலாம் என, பழனிசாமி போன்றோர், பகல் கனவு காண வேண்டாம்.என ஸ்டாலின் கூறி உள்ளார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
adalarasan - chennai,இந்தியா
31-ஜூலை-201723:02:05 IST Report Abuse

adalarasanநீங்காமலும் கடந்த 6 மாதங்களாக முயற்சி செய்து கட்சியை உடைத்து, எல்லா வேலையத்த போராட்டங்களையும் நடித்தினீங்க பாவம்? சும்மா ஏன் பயம் காட்டுறிங்க? 10 வருடங்கள் ம் முன்பாகவே உங்கள் தந்தை, உங்களை முதலவர் ஆகியிருக்கலாம்? செய்யவில்லை இப்பொழுது நாள் கடந்துவிட்டது? பேசாம பொறுமையாக இரும்து முடிந்தால் அடுத்த தேர்தளில் ஜெயித்து காட்டுங்க? அதற்குள் என்னென்ன மாற்றங்கள் வரும் என்று அந்த கடவுளுக்குத்தான் [நீங்கள் நம்பாத] வெளிச்சம்?

Rate this:
manu putthiran - chennai ,இந்தியா
31-ஜூலை-201722:13:34 IST Report Abuse

manu putthiranகூரை ஏறி கோழி புடிக்காதவன் ,வானம் ஏறி வைகுந்தம் போக முடியாது..ஜெயலலிதா இறந்தவுடன் DMK க்கு நல்லவாய்ப்பு வந்தது..இவர்களிடம் உள்ள பணத்திற்கு 50 MLA களை சுலபமாக வாங்கி இருக்கலாம்..இப்போது ADMK கிட்டத்தட்ட BJP வசம் சென்றுவிட்டது..இன்றய நிலையில் அனுபவம் வாய்ந்த காங்கிரஸ் கட்சியே BJP இடம் கடுமையாக உதைபட்டுக்கொண்டு இருக்கிற MLA க்களை காப்பாற்ற போராடுகிறது ... இங்கே ஸ்டாலின் தமாசு பண்ணுகிறார்..

Rate this:
காவியன் புஷ்பராஜ் - Mannachanallur,இந்தியா
31-ஜூலை-201719:45:31 IST Report Abuse

காவியன் புஷ்பராஜ்கட்டிங்கை கட் பண்ணிட்டாங்களோ?

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
31-ஜூலை-201719:32:54 IST Report Abuse

Pugazh Vஇங்கே ஸ்டாலினை எதிர்த்து எழுதியிருப்பவர் எல்லாம் இந்த ஆட்சிக்கு வக்காலத்து வாங்கி இப்போதைய ஆட்சியை அங்கீகரிக்கிறவர்கள் இல்லையா? நல்ல அரசியல் தெளிவு, இதையே மெயின்டெயின் பண்ணுங்க...அடுத்த தேர்தலிலும், ரெட்டை இலைக்கே வாக்களியுங்கள். அப்புறம் வீதி வீதியா குடங்களை தூக்கிக்கிட்டு தண்ணிக்கு அல்லாடலாம். அப்பாவும் இதே ஸ்டாலின் தான், தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என்று குரல் கொடுப்பார், அப்பவும், நீ பேசாதே, நாங்க அப்படித்தான் செத்து பொழச்சுக்குவோம் என்று எழுதுவார்கள்.

Rate this:
Sivagiri - chennai,இந்தியா
31-ஜூலை-201719:12:44 IST Report Abuse

Sivagiriபேசாம கொஞ்ச நாள் சினிமாவுல ஆக்ட் குடுக்கப் போலாம்ல . . . வொர்க்-அவுட் ஆகுதான்னு பாக்கலாம் . . .

Rate this:
Sivagiri - chennai,இந்தியா
31-ஜூலை-201719:11:24 IST Report Abuse

Sivagiriஅது சரி . . . மோடி - EPS - OPS - பெங்களூரு - தினகரன் - கலாம் - எம்-ஜி-ஆர் நூற்றாண்டு - நீட் - நெடுவாசல் - கமல் - ரஜினி - சீனா - பாகிஸ்தான் - எல்லோர் பெயரும் டெய்லி பேப்பர்ல வருது . . . இவ்வளவுக்கும் மத்தியில் இவர் பெயரும் வரணும்னு ஏதேதோ செஞ்சு பாக்குறாரு . . . பாவம் . . . இவரை கவனிக்க ஆளில்லை . . . அப்பாவோட பழைய நண்பர்களை பார்த்து கொஞ்சம் கூட்டத்தை சேர்க்கலாம்ல . . .

Rate this:
Kumar -  ( Posted via: Dinamalar Android App )
31-ஜூலை-201718:01:44 IST Report Abuse

Kumarசிப்பு வருது

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
31-ஜூலை-201717:26:44 IST Report Abuse

Endrum Indianஒருக்காலும் நடக்காது. நீ போய் உன் பேரை முதலில் தமிழ்ச்செல்வன் என்று மாற்றிக்கொண்டு வந்து விட்டு டாஸ்மாக்கினாட்டில் பேசலாம். அந்த காரியத்தை முதலில் செய்?

Rate this:
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
31-ஜூலை-201715:13:16 IST Report Abuse

Nallavan Nallavanமிகவும் மகிழ்ச்சி ..... உங்களால் வேறென்ன செய்யமுடியும் ???? உங்களால் நல்லதொரு ஆட்சியைத் தர முடியாததால் வாய்ப்பை அதிமுக -வுக்கே அளித்து வந்தனர் மக்கள் .....

Rate this:
bal - chennai,இந்தியா
31-ஜூலை-201715:09:32 IST Report Abuse

balஇந்தியா நாட்டு மன்னர் கூறி விட்டார். எனக்கு பயமாக இருக்கு....

Rate this:
மேலும் 42 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement